பொது வெளியில்
பற்றியெரிகிறது
பாலையின்
பெரு நெருப்பு!
குப்பைகள் மனம் நிரம்பி
சுத்தம் பேணுதல்
தொடர்கதையாகிறது!
ஆழ்மன அவலங்களின்
பின்னணிக் கொடூரம்
அரங்கேறுகிறது
உக்கிரத்தில்!
சுயம்
நிஜங்களை
மென்று
தின்றதில்
இறந்து போகிறது
மனிதம்!
மிருகம் பொதிந்த
தள்ளாட்டக் குறியீடுகளில்
சிதறுகிறது இரத்தம்!
பள்ளத்தாக்குகளின்
பயமுறுத்தல்களில்
பீறிடுகிறது
அன்பின் அலறல்!
கண்ணீரைத் தெளித்தபடி
விம்மித் தவித்து
சிதைந்து போகிறது
அக்கறை மனிதர்கள்
தொலைத்த
கலைக்கப்பட்டதொரு
சிறு கூடு!
எஸ்.மகேஷ்
சென்னை
மறுமொழி இடவும்