மின்னலென வந்தாள்
ஜன்னல் கதவு திறந்தாள்
எள்ளல் பேசி நகைத்தாள்
வள்ளலென வார்த்தைகள்
வீசினாள்…
மோதலென ஆரம்பித்தாள்
காதல் எதுவெனக்
கற்றுத் தந்தாள்…
வானம் எங்கும் நிறைந்தாள்
கானம் என அதில் கரைந்தேன்
நான்…
நாணம் கொண்டு சிவந்தாள்
பாணம் ஒன்றைத் தொடுத்தாள்…
மானம் இன்றிப் பெற்றுக்
கொண்டேன் நான்…
கன்னல் மொழி பேசினாள்
இன்னல் பல ஈன்றாள்
நாணல் என வளைந்தாள்
கானல் என மறைந்தாள்
ஐயிருதிங்கள் கழிந்தே
வந்தாள் மீண்டும்…
கையறு நிலையென
கைகள் பற்றினாள்..
கண்களிலே ஒற்றினாள்…
மன்னித்துவிடு என்றாள்
பின் மறந்து விடு என்றாள்…
பற்றிய கைகளை
பட்டென்று விடுத்தேன்
சீறிய எண்ணமதை
சீர்செய்து மாற்றினேன்…
ஏறினேன் பேருந்திலே
ஏற்றதொரு வாழ்வைத் தேடி…
மனக்குழியில் புதைந்த பெண்ணை
மரணக் குழியில் தள்ள
நான் ஒன்றும்
சத்யாவின் சதீஸும் அல்ல
சுவாதியின் ராம் குமாரும்
அல்ல…
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!