தமிழினி (எ) த.சுமையா தஸ்னீம் அவர்களின் ஹைக்கூ கவிதைகள்.
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்
பாடிய விதவை
காற்று மாசு
மூச்சுத் திணறிய
சாலையோர மரங்கள்
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காணவில்லை
புகைப்படத்திற்காக உதவி
அண்மையில் தெரியும்
அழகிய மாயை
கானல் நீர்
வழியெங்கும் தொடரும்
வாழ்க்கைத் தோழன்
வானம்
தமிழினி (எ) த.சுமையா தஸ்னீம்
அருமையான கவிதைகள்.
வானம் பற்றிய ஹைக்கூ சிறப்பு.சிறப்பான கவிதைகளை படைக்கும் தமிழினிக்கு வாழ்த்துகள்.💐💐💐💐👌👌👌🤝🙏😍