இன்றைய வாழ்வில் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் பயன்படும் வாழ்க்கை நெறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கை எது வரை?
வாழ்வென்பது உயிர் உள்ளவரை மட்டுமே. ஆதலால் தேவைக்கு செலவிடு. அனுபவிக்க தகுந்தன அனுபவி. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தைக் கடைபிடி. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை. போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே. உயிர் பிரியும் வரை தான் வாழ்வு; ஒரு நாள் கட்டாயம் அது பிரியும். அப்போது சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.பின்பற்ற வேண்டியவை
உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு.
உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. அவ்வப்போது பரிசுகள் அளி. குழந்தைகளிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட பாசமாய் இருந்தாலும்,பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ,
உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.
அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள். ஆதலால் இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு. ஆனால், நிலைமையை அறிந்து அளவோடு கொடு.
எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே. எல்லாமே இறந்த பிறகு என, உயில் எழுதி வைத்திராதே! நீ, எப்போது இறப்பாய் என எதிர்பார்த்து காத்திருப்பர். எனவே கொடுப்பதை கொடுத்து விடு, பிறகு தரவேண்டியதைப் பிறகு கொடு. வாழ்க்கை வாழ்வதற்கேமாற்ற முடியாததை மாற்ற முனையாதே.
மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.அமைதியாக மகிழ்ச்சியோடு இரு. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
நண்பர்களிடம் அளவளாவு.நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி இறை பக்தி கொண்டு குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ். இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள் சுலபமாக ஓடிவிடும்.
வாழ்வை கண்டு களி!
வாழ்வில் செய்ய வேண்டியவை
மடையன், சுயநலக்காரன், முட்டாள், ஓய்வாக இருப்பவன் ஆகிய நான்கு நபர்களை புறக்கணி.பொய்யன், துரோகி, பொறாமைக்காரன், மமதை பிடித்தவன் ஆகிய நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே.
அனாதை, ஏழை, முதியவர், நோயாளி ஆகிய நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே.மனைவி, பிள்ளைகள், குடும்பம், சேவகன் ஆகிய நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே.பொறுமை, சாந்த குணம், அறிவு, அன்பு ஆகிய நான்கு விசயங்களை ஆபரணமாக அணி.
தாய், தந்தை, சகோதரன், சகோதரி ஆகிய நான்கு நபர்களை வெறுக்காதே.உணவு, தூக்கம், சோம்பல், பேச்சு ஆகிய நான்கு விசயங்களை குறை.
துக்கம், கவலை, இயலாமை, கஞ்சத்தனம் ஆகிய நான்கு விசயங்களை தூக்கிப்போடு.மனத்தூய்மை உள்ளவன், வாக்கை நிறைவேற்றுபவன், கண்ணியமானவன், உண்மையாளன் ஆகிய நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு.
தியானம், நூல் வாசிப்பு, உடற்பயிற்சி, சேவை செய்தல் ஆகிய நான்கு விசயங்கள் செய்.வாழ்க்கை நெறிகள் பற்றி அறிந்து செயல்பட்டால், என்றும் நம் வாழ்க்கை இனிது.