வேடிக்கையா? இல்லை விந்தையா?
கூக்குரலிடும் குருவிகளுக்குப்
பதில் கூற யாரும் இல்லை
கூச்சலிடுகின்றன குருவிகள்
கேட்பவர் கேட்கிறனர்
இரசிப்பவர் இரசிக்கின்றனர்
சத்தம் என்று திட்டிக் காதைப்
பொத்திச் செல்கின்றனர் சிலர்
விந்தையான உலகமா இல்லை
விந்தை செய்கின்ற உலகமா?
வேடிக்கைகள் சில கேள்வியாகின
கேள்விகள் சில வேடிக்கையாகின
புதிர்கள் பல புதராய்ப் போயின
புதிர்கள் சில புதிராய்த் தவிக்கின்றன…
பேனாவின் காதலி
ரம்யா அய்யாவு
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!