நம் ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல போஷாக்குமிக்க உணவுகள் தேவை. அப்போதுதான் அவைகளில் அடங்கியுள்ள வைட்டமின்கள் (உயிர் சத்துக்கள்) நம் உடலைப் புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் திகழச் செய்யும்.
நம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் வைட்டமின் அளவு எவ்வளவு? அதிகபட்சமாக எவ்வளவு இருக்கலாம்?
குறிப்பிட்ட அளவுக்கு மேல் வைட்டமின் நம் உடலில் சேரும்போது ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு வைட்டமின் நிறைந்த நல்ல உணவுகளைச் சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் திகழுங்கள்.
வைட்டமின் ‘ஏ’
ஆண்களுக்குத் தேவையான அளவு: 900 மைக்ரோ கிராம்கள்
பெண்களுக்கு தேவையான அளவு: 700 மைக்ரோ கிராம்கள்
அதிகபட்ச அளவு: 3000 மைக்ரோ கிராம்கள்
காரட், பச்சைக் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில்
வைட்டமின் ‘ஏ’ நிறைந்திருக்கிறது.
வைட்டமின் ‘பி12’
மூன்று அவுன்ஸ் மாட்டிறைச்சியில் 2.4 மைக்ரோ கிராம்கள் வைட்டமின் பி12 உள்ளது.
50 வயதைத் தாண்டியவர்கள் சாதாரணமாக பி௧2 உயிர்சத்தினை உணவு வகைகளிலிந்து பெறும் சக்தியை இழந்துவிடுவதால் தானிய வகைகளை இவர்கள் நாடலாம்.
வைட்டமின் ‘சி’
ஆண்களுக்கு தேவைப்படும் அளவு: 900 மில்லி கிராம்கள்
பெண்களுக்குத் தேவைப்படும் அளவு: 75 மில்லி கிராம்கள்
புகைப்பிடிப்பவர்களுக்கு தேவைப்படும் அளவு: 35 மில்லி கிராம்கள்
எட்டு அவுன்ஸ் ஆரஞ்சுச்சாறில் உள்ள வைட்டமின் ‘சி’ நமக்கு அன்றாடம் தேவை.
அதிகபட்ச அளவு: 2000 மில்லி கிராம்கள்.
இதைத்தாண்டினால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
வைட்டமின் ‘டி’
பெரும்பாலோர்க்குத் தேவைப்படும் அளவு: 200 ஐ.யூ (இன்டர்நேஷனல் யூனிட்ஸ் – ஐ.ம)
51 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு: 400 ஐ.யூ.
பதப்படுத்தப்பட்ட பாலில் நிறைந்துள்ளது இந்த உயிர்ச்சத்து.
வைட்டமின் ‘இ’
தேவைப்படும் அளவு: 15 மில்லி கிராம்கள்
அதிகபட்ச அளவு: 1000 மில்லி கிராம்கள்
குறிப்பிட்ட அளவைத் தாண்டினால் கட்டுப்படுத்த முடியாத ரத்தப்போக்கு ஏற்படும்.
ஃபோலிக் அமிலம்
தேவைப்படுவது: 400 மைக்ரோகிராம்கள்
பசலைக்கீரை மற்றும் ஆரஞ்சுப்பழங்களில் காணப்படுகிறது.
தாய்மைப்பேறு அடைந்திருக்கும் பெண்களுக்கு ஆரம்பகாலங்களில் தேவை. அப்போதுதான் எந்தக் குறையுமின்றி குழந்தை பிறக்கும்.
அதிகபட்ச அளவு: 1 மில்லி கிராம் ஒரு நாளைக்கு.
அளவு அதிகமாகும் பட்சத்தில் நரம்புகள் பாதிக்கப்படும்.
கால்ஷியம்
தேவைப்படும் அளவு: பெரும்பாலானவர்களுக்கு தினம் 1000 மில்லி கிராம்கள்
வயது வந்த இளவயதினருக்கு: 1300 மில்லி கிராம்கள் (Teenager)
50 வயதைத் தாண்டியவர்களுக்கு: 1200 மில்லி கிராம்கள்.
ஆரஞ்சு சாற்றில் இது மிகுந்து காணப்படுகிறது.
வைட்டமின் ‘ஒ’
ஆண்களுக்கு தேவைப்படும் அளவு: 120 மைக்ரோ கிராம்கள்
பெண்களுக்கு தேவைப்படும் அளவு: 90 மைக்ரோ கிராம்கள் .
பச்சைக் காய்கறிகளில் அதிகம் நிறைந்துள்ளது.
இரும்புச் சத்து
ஆண்களுக்குத் தேவைப்படும் அளவு: 8 மில்லி கிராம்கள்
மாதவிடாய் நின்று போன பெண்களுக்கு: 8 மில்லி கிராம்கள்
மாதவிடாய் நிற்கக்கூடிய நிலையிலுள்ள பெண்களுக்கு: 18 மில்லி கிராம்கள்
தாய்மையடைந்த பெண்களுக்கு: 27 மில்லி கிராம்கள்
அதிகபட்ச அளவு: 45 மில்லி கிராம்கள்
அளவு அதிகமாகும்போது வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும்.
துத்தநாகச் சத்து
ஆண்களுக்குத் தேவைப்படும் அளவு: 11 மில்லி கிராம்கள்
பெண்களுக்குத் தேவைப்படும் அளவு: 40 மில்லி கிராம்கள்
அதிக அளவு துத்தநாகச்சத்தானது, உடல் தாமிரச்சத்தைக் கிரகிப்பதைத் தடுத்துவிடும்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!