“அண்ணே! மேல கெடக்கியா? கீழ கெடக்கியா?” என்று கும்மிருட்டுக்குள் கையில் வீச்ச அரிவாளை வைத்து கொண்டு கேட்டான் வேத முத்து.
அடுத்த நொடியே “கீழ கெடக்கேன் தம்பி” என்று ஈன முத்துவிடம் இருந்து பதில் வந்தது.
அடுத்த நொடியே கையில் இருந்த வீச்ச அரிவாளை இறுகப் பற்றிக் கொண்டு ஓங்கி வெட்டினான் வேத முத்து.
அதற்கடுத்த நொடியில் ‘ஆ’ வென அலறினான் ஈன முத்து.
“அண்ணே! என்ன ஆச்சி?” என்றான் வேத முத்து.
உயிருக்கு போராடிய நிலையில் “என்னைய வெட்டிட்டயடா தம்பி” என்றான் ஈன முத்து.
ஈன முத்து சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான் வேத முத்து.
Continue reading “பாகப்பிரிவினை – சிறுகதை”