ரவா உப்புமா – சிறுகதை

ரவா உப்புமா

நாலுபக்கமும் களிமண்ணாலான சுவர். அதற்கு மேலே தென்னங்கீற்றாலான கூரை, அடுப்பங்கரைக்கு மட்டும், இரு கீற்று மறைப்பு, இதுதான் எங்கள் வீடு.

குளியலறை வீட்டுக்கு அருகிலேயே ஓடிய அரசலாறு. டாய்லெட் – அரசலாற்றின் ஓரம் உள்ள, செடி கொடிகள் மரங்கள் நிறைந்த காட்டுக் கரை.

டாய்லெட் நேரம் ஆண்கள் காலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள். பெண்கள் மாலை 6.30 மணிக்கு மேல் 7.30-க்குள்.

மேலும் லக்னம், ராசி எல்லாம் அவரவர் இஷ்டம். ஏனெனில் இருட்டு நேரத்தில் பாம்பு, பூச்சிகள் போன்றவற்றால் பின்னால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு அவரவர்கள்தான் பொறுப்பு.

Continue reading “ரவா உப்புமா – சிறுகதை”

மிருக வதை – சிறுகதை

மிருகம்

“தாமர”

“எஸ் மேடம்”

“குப்புராஜ் நகர்ல எனக்கு ஒரு பிரண்டு இருக்கான்னு சொல்லியிருக்கேன் இல்லையா?”

“ஆமா மேடம். தையல் கடை நடத்தறாங்கன்னு”

“ஆமா, அங்க போ. என்னவோ பிரச்சனை. மீட்டிங்கல இருக்கேன்.”

“ஒகே மேடம். உடனே கெளம்பிடறேன்.”

“டூட்டி எப்ப?”

“முடிச்சுட்டு இப்பதான் மேடம் வந்தேன். இப்பதான் வீட்டுக்குள்ள நுழைஞ்சேன்.”

“அடடா, சாரி தாமர. நான் வேற ஆள.”

Continue reading “மிருக வதை – சிறுகதை”

கதை கதையாம் காரணமாம் – சிறுகதை

கதை கதையாம் காரணமாம்

பள்ளியில் ஆண்டு மலர் தயாரித்து வெளியிடப் போகிறார்களாம்.

மாணவர்களின் பங்கு அதில் நிறையவே இடம் பெற வேண்டும் என்றும், ஆண்டு மலருக்கான கதைகள், கட்டுரைகள், புதிர்கள், ஜோக்குகள் போன்றவற்றை மாணவர்கள் எழுதி சமர்ப்பிக்கலாம் என்றும் சுற்றறிக்கை வந்தது.

தன் எழுத்தாற்றலைக் காண்பிக்க நல்லதொரு சந்தர்ப்பம் கைகூடி வந்திருப்பது கண்டு சரவணனின் மனம் சிறகடித்துப் பறந்தது.

என்ன எழுதுவது? கதையா? கவிதையா? கட்டுரையா? ஜோக்கா? அல்லது புதிரா?.

Continue reading “கதை கதையாம் காரணமாம் – சிறுகதை”

முகக்கவசம் ‍- சிறுகதை

முகக்கவசம்

நான் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருக்கையில் சட்டென்று அவரைப் பார்த்த போது எனக்கு மிகவும் சங்கடமாகவும் பயமாகவும் இருந்தது. இது இரண்டாவது முறை, நான் அவரிடம் மாட்டிக் கொள்வது.

எதற்கெல்லாம் பயம் கொள்வது என்ற வரையறையே இல்லாது, போயும் போயும் இந்த பக்கத்து வீடு துக்காராம் அங்கிளுக்கு போய் பயப்பட வேண்டியதாய் போயிற்று. அதுவும் பெரிதாய் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய காரணம் ஒன்றும் கிடையாது.

இன்றும் முகக் கவசத்தை மறந்து விட்டேன்; அவ்வளவு தான்.

Continue reading “முகக்கவசம் ‍- சிறுகதை”

ஜோசியக்கிளி – சிறுகதை

ஜோசியக்கிளி

சியாமளாவும், ஷீலாவும் முன்னால் நடந்து செல்ல, அவர்கள் பின்னாலேயே கோபிநாத் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

ஷீலா அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்தவாறே வந்து கொண்டிருந்தாள்.

அன்று வெள்ளிக்கிழமையாதலால் கடைவீதி முழுக்க சாம்பிராணியின் நறுமணம் மூக்கை துளைத்தது.

யானை ஒன்று, மணியோசையுடன் ஆடி அசைந்து வந்து ஒவ்வொரு கடைவாசலிலும் நின்று துதிக்கையை நீட்டியது.

Continue reading “ஜோசியக்கிளி – சிறுகதை”