எது தான் கவிதை இல்லை? எங்கு தான் கவிதை இல்லை?

மண் சட்டி

எது தான் கடவுள் இல்லை? எங்கு தான் கடவுள் இல்லை? என்பார்கள் ஆன்மிக அன்பர்கள்.

எது தான் கவிதை இல்லை? எங்கு தான் கவிதை இல்லை? என்பார்கள் அரும்பெருங் கவிஞர்கள்.

கவிதைகளின் வெளிப்பாடுகள் காலத்தால் நிர்ணயிக்கப்படாமல், வாசிப்பின் நேசிப்பை அடித்தளமாகக் கொண்டே காலகாலத்திற்குமானதாய் வடிவம் கொள்கின்றன. தீராப்பசியுடன் அவை அலைகின்றன; எது கிடைத்தாலும் செரிக்க ஆயத்தமாகி விடுகின்றன.

Continue reading “எது தான் கவிதை இல்லை? எங்கு தான் கவிதை இல்லை?”

ஆள்க நீ தமிழ்மகளே!

எழிலிடை எழுகதிரே எருதுகள் உழுநிலமே
பொழிலிடை எழுமலரே புதுப்புனல் தருநதியே
வழியிடை வருநிலவே வளர்தரு நிலத்திணையே
கழிமடம் தமிழ்நிலத்தில் கழிந்ததென் றறைகுகவே

Continue reading “ஆள்க நீ தமிழ்மகளே!”

திருக்குறளும் செங்கோட்டை ஆவுடையக்காவின் வேதாந்தப் பாடல்களும்

காலந்தோறும் வகுக்கப் பெற்ற ஒட்டு மொத்த எண்ணப் பிழிவுகளும் அதன் உண்மைத் தன்மையும், பிற உயிர்களின் மேன்மைக்கும் வாழ்க்கைத் தீர்வுகளுக்கும் எவ்விதமாய் அடித்தளமாக இருக்கின்றன என்பதே அற இலக்கிய வரலாறாக இருக்கின்றது.

Continue reading “திருக்குறளும் செங்கோட்டை ஆவுடையக்காவின் வேதாந்தப் பாடல்களும்”