மனமே – கவிதை

மனம் என்பது மனிதன் ஆகலாம்
மனிதன் என்பவன் மனம் ஆகலாம்

நீ கூட்டம் கூட்டமாக எங்கே ஊர்ந்து
கொண்டு போகிறாய் மனமே?

நீ கணித்த இலக்கு அடுத்த நிமிடம்
நிரந்தரமற்றது என்று அறிவாயா மனமே?

நீ உன்னை அறியாமல் எத்தனை சக
மனதினைக் காயப்படுத்தினாய் மனமே?

Continue reading “மனமே – கவிதை”

மாரிக் கால சிந்தனை – கவிதை

மாரி என்றால் மழை என்று பொருள். 2021ம் ஆண்டு சென்னையின் பெருமழை பாதிப்பைப் பார்த்து வருத்தமும் கோபமுமாய் எழுந்த கவிதை.

ஏரி வாய்க்காலைத் தூக்கி விழுங்கியோர்
தப்பிப் பிழைத்த லரிது

காரிகாரி உமிழ்ந்தும் கேட்காத மக்கள்
மாரியால் ஆவார் மாக்கள்

வீடுவீடென்று மாடியில் மாடி கட்டியோர்
நாறுநாறென்று நாறுவரே மாரியால்

Continue reading “மாரிக் கால சிந்தனை – கவிதை”

எல்லோரும் ஒருவரே – கவிதை

நானும் எனது நினைவுகளும்

மற்றும் எழுதும் காகிதமென

மூன்று அடுக்குகளாய் இருந்தோம்

அங்கே இங்கும் அங்கும்

தாவும் அர்த்தங்கள் மோதிக்கொண்டன‌

Continue reading “எல்லோரும் ஒருவரே – கவிதை”

குறையொன்றும் இல்லை – கவிதை

உடலின் பாகங்களின் வளர்ச்சி குறைபாடெல்லாம்

குறையெனச் சொல்லி ஓடிட முடியாதே!

அவர்களின் தன்னம்பிக்கை கண்டாலே வானமும்

இரண்டு அடி இறங்கி வந்திடுமே!

Continue reading “குறையொன்றும் இல்லை – கவிதை”