கன்சிராம் – எளிய மக்களின் அரசியல் ஆசான்

கன்சிராம்

கன்சிராம் எளிய மக்களின் அரசியல் ஆசான் ஆவார். இந்தியாவில் அடித்தட்டு மக்களும் அதிகாரத்தில் பங்கேற்பதற்கு வழிவகை செய்தவர் அவர்.

அரசியல்வாதி, பௌத்த அறிஞர், சமூக செயற்பாட்டாளர், சாதியை முற்றும் முழுவதுமாக அழித்தொழிக்க எண்ணிய மாமனிதர், அம்பேத்கரின் சிந்தனையாளர், வகுப்புவாத சக்திகளை எதிர்த்து களமாடிய களப்போராளி, பகுஜன் சமாஜ் கட்சியை தோற்றுவித்தவர், தேசியத் தலைவர், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர் இப்படி அவரின் பெருமையை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

ஆனாலும் சிறந்த மனிதன் என்பதைத் தவிர வேறு எந்த பட்டமும் அவரை அலங்கரிக்காது.

Continue reading “கன்சிராம் – எளிய மக்களின் அரசியல் ஆசான்”

உள்பரிமாணங்கள் – நூல் அறிமுகம்

உள்பரிமாணங்கள் என்னும் நூல் சிறந்த கொங்கணி மொழிச் சிறுகதைகளின் தொகுப்பு. ‘அந்தர் ஆயாமி‘ என்பது மூல நூலின் பெயர். இந்த கொங்கணிச் சிறுகதை நூல் 1994ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற‌து.

இதன் ஆசிரியர் கோகுல்தாஸ் பிரபு, ஒரு சிறந்த கொங்கணி மொழி எழுத்தாளர். கோபிநாத் ஹெக்டே இதனைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். சாகித்திய அகாதெமி இந்நூலை வெளியிட்டுள்ளது.

உள்பரிமாணங்கள் என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பில் ஆசிரியர், இக்கட்டான நிலைகளில் மக்களின் எண்ணங்களைப் பற்றி எழுதியுள்ளார்.

Continue reading “உள்பரிமாணங்கள் – நூல் அறிமுகம்”

நச்சுப்புகை – கவிதை

நச்சுப்புகை - கவிதை

புகைப்பிடித்தல் எவ்வளவு மோசமானது என்பதைத் தெளிவாகச் சொல்லும் கவிதை. போதை ஏற்படுத்தும் அழிவு பற்றிப் புகை பேசுவது போல அமைந்துள்ளது கவிதை.

ஊதி ஊதிப் போட்ட பின்னே

மிஞ்சியது பஞ்சு மட்டுமே!

Continue reading “நச்சுப்புகை – கவிதை”

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்?

கணவன் மனைவி உறவு

கணவன் மனைவி உறவு புனிதமானது. மனித இனத்தின் சிறப்பான வாழ்விற்கு அதுதான் அடிப்படை.

நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்‘ என சொல்வதுண்டு.

ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களது குடும்ப வாழ்க்கையை, அவர்களது குடும்பத்தை எடை போட முடியும்.

இன்றைய நாளில் பெரும்பாலான குடும்பங்களில் தோன்றும் பிரச்சினைகளில் முக்கியமானது கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஊடல், சண்டை அல்லது கருத்து வேறுபாடு.

குடும்பத்தின் சீர்குலைவுக்கு அஸ்திவாரம் அமைப்பதே இத்தகைய போக்குதான்.

இருவருக்குள்ளும் ஒருவித ‘ஈகோ‘ என்று சொல்லப்படும் வறட்டு கௌரவம் தோன்றிக் கொள்ள பிரச்சனை தலைதூக்குகிறது.

Continue reading “கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்?”