மனிதன் என்னும் பேய்க்கூட்டம்

இயற்கையின் இன்ப சரித்திரத்தில்
பூமியும் ஒன்று

அது அண்டத்தின் அழகான திருவுருவம்
ஆற்றல் நிரம்பிய பேருருவம்

Continue reading “மனிதன் என்னும் பேய்க்கூட்டம்”

நல்ல நண்பர்கள் யார்? – சிறுவர் கதை

குட்டித் தவளை - சிறுவர் கதை

சோலையூரில் அழகிய குளம் ஒன்று இருந்தது. அக்குளம் நீரால் நிரம்பி வழிந்தது. அக்குளத்தில் தாமரை, அல்லி, குவளை போன்ற தாவரங்கள் காணப்பட்டன.

செந்தாமரை வெண்தாமரை மற்றும் குவளை மலர்களால் பகலிலும், செவ்வல்லி மற்றும் வெள்ளல்லி மலர்களால் இரவிலும் மிகவும் அழகாகக் குளம் காட்சியளித்தது.

அக்குளத்தில் அயிரை, கெண்டை, விரால், தங்கமீன் போன்ற மீன் வகைகளும், தவளைகளும் சந்தோசமாகச் சுற்றித் திரிந்தன.

அக்குளத்தில் சங்கு என்ற குட்டித் தவளை ஒன்று வசித்தது. அது மிகவும் அன்பானது. எல்லோரிடமும் மிகவும் நட்புடன் பழகும்.

Continue reading “நல்ல நண்பர்கள் யார்? – சிறுவர் கதை”

பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி?

பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி?

அலைகள் இல்லாத கடல் இல்லை. பிரச்சினைகள் இன்றி வாழ்க்கை இல்லை. ஏழையோ பணக்காரனோ, ஆணோ பெண்ணோ ஒவ்வொருவருமே ஏதாவது ஓர் பிரச்சினையை அன்றாட வாழ்வில் சந்திக்கிறார்கள்.

பிரச்சினையின் விதமும், தீவிரமும் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றன.

பிரச்சினையை நாம் எப்படி சந்திக்கிறோம்? அல்லது ஏற்படுத்திக் கொள்கிறோம்?

நம்மை சுற்றியிருப்பவர்களை நாம் கூர்ந்து கவனிப்போமேயானால் சரியான விடை கிடைத்து விடும்.

Continue reading “பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி?”

அவல் பாயசம் செய்வது எப்படி?

அவல் பாயசம்

அவல் பாயசம் பண்டிகை நாட்களிலும், விருந்தினர்களின் வருகையின் போதும் செய்யக் கூடிய அருமையான இனிப்பு வகை.

இதனுடைய சுவையும் மணமும் மிகவும் எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கும்.

Continue reading “அவல் பாயசம் செய்வது எப்படி?”

கழற்சிங்க நாயனார் – சிவ அபதாரம் செய்த மனைவியின் கையை வெட்டியவர்

கழற்சிங்க நாயனார்

கழற்சிங்க நாயனார் சிவ வழிபாட்டிற்கான மலரை எடுத்து முகர்ந்த தன்னுடைய மனைவியின் கையினை வெட்டிய பல்லவ மன்னர். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

கழற்சிங்க நாயனார் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டினைக் கோலோச்சிய பல்லவ மன்னர் ஆவார்.

Continue reading “கழற்சிங்க நாயனார் – சிவ அபதாரம் செய்த மனைவியின் கையை வெட்டியவர்”