கற்கை நன்றே

கற்​கை நன்​றே

ஒரு பயிற்சி நிறுவனத்தின் பிரதிநிதி சமீபத்தில் என்​னை சந்தித்தார்.

அவர் மாணவ மாணவியர் ​போட்டித் ​தேர்வுகளுக்குத் தங்க​ளை தயார் ​செய்து ​கொள்ள ஏதுவான ​மென்​பொருள் ஒன்றி​னை தங்கள் நிறுவனம் அறிமுகம் ​செய்திருப்பதாகக் கூறி, அத​னைப் பற்றி எனக்கு விளக்கமளித்தார். ​

தேர்வுகளுக்கு எப்படி விண்ணப்பது என்பதில் ஆரம்பித்து, ஒவ்​வொரு பாடத்தைப் பற்றியும் ​நேர்த்தியான விளக்கங்கள், எளிய மு​றையில் வினாக்க​ளை எதிர்​கொள்ளத் தே​வையான யுக்திகள், விரிவான வினா விடைகள் மற்றும் பல்​வேறு ​தேர்வுப் பயிற்சிகள் என ​சிறப்பாகச் ​செய்து காண்பித்தார்.

Continue reading “கற்கை நன்றே”

காஜு கத்லி – சிறுகதை

காஜு கத்லி

அகல்யாவும் ஷர்மிலியும் கலைக் கல்லூரி ஒன்றின் கணினிப் பிரிவு பேராசிரியைகள்.

விழித்திருக்கும் 90 சதவிகித நேரத்தை பணி இடத்திலேயே செலவிடுபவர்களுக்கு, சக பணியாளர்களே சொந்தமாக உறவாக மாறிப் போகிறார்கள்.

அப்படிதான் அகல்யாவும் ஷர்மிலியும் நட்பாகி, உறவாகி, தங்கள் சுகம், துக்கம், மகிழ்ச்சி, குடும்பம், வேலை என எல்லா சங்கதிகளையும் பரிமாறிக்கொண்டு வாழ்பவர்கள்.

கல்லூரியில் பாடம் எடுப்பது மட்டும் வேலை இல்லை. அது சார்ந்த நிறைய பணிகள் இருந்து கொண்டே இருக்கும். அந்த பணிச்சுமை தீராத அழுத்தத்தை தந்து கொண்டே இருக்கும்.

Continue reading “காஜு கத்லி – சிறுகதை”

அவர்கள் – கவிதை

ஒரு காலத்தில் 
அவன் அந்த தெருக்களில் 
நண்பர்கள் புடைசூழ 
நடந்து கொண்டிருந்தான் 

காற்றில் கரைந்த 
அந்த பேச்சுக்கள் 
இன்னும் மிச்சம் மீதி என்று 
ஏதோ அவன் காதில் 
ஒலித்துக் கொண்டிருந்தது 

Continue reading “அவர்கள் – கவிதை”

உடல் பருமன் – குழந்தைகளின் எதிரி

உடல் பருமன்

உடல் பருமன் இன்று உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஓர் உடல்நலக் குறைபாடாகும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன் நோயால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

பெரியவர்களாலேயே சமாளிக்க முடியாத சில உடல் உபாதைகள் உடல் பருமனால் ஏற்படுகிறது எனும்போது, குழந்தைகளுக்கு ஏற்படும் சிரமங்கள் சொல்லி மாளாது.

குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமன், அதனால் அவர்கள் சந்திக்கும் உடல், மன, சமூக ரீதியிலான பிரச்சனைகள் மற்றும் அதனைத் தவிர்க்கும் பொருட்டு பெற்றோர்களின் கவனம் ஆகியவற்றை எடுத்துக்கூறும் விழிப்புணர்வு கட்டுரையே இது.

Continue reading “உடல் பருமன் – குழந்தைகளின் எதிரி”