வத்தல் குழம்பு செய்வது எப்படி?

வத்தல் குழம்பு

வத்தல் குழம்பு வீட்டு விசேஷங்களில் செய்வது வழக்கம். ஹோட்டல்களிலும் இது கிடைக்கும். நாமும் அசத்தலான சுவையில் எளிமையாக வத்தல் குழம்பு செய்யலாம்.

பொதுவாக வற்றல் குழம்பு என்றாலே சுண்டைக் காய் வற்றலைச் சேர்த்தே குழம்பு செய்வர். இதில் சேர்க்கப்படும் சுண்டைக்காய் வற்றல் மருத்துவக் குணம் வாய்ந்தது.

சுண்ட வற்றலுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பாற்றலை வழங்கும் திறன் அதிகம். ஆதலால் சுண்ட வற்றலை குழம்பு செய்தோ, வறுத்தோ உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுதல் அவசியம்.

சுவையான சுண்ட வத்தல் குழம்பு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “வத்தல் குழம்பு செய்வது எப்படி?”

குலச்சிறை நாயனார் – மதுரையில் சைவம் தழைக்க வித்திட்டவர்

குலச்சிறை நாயனார்

குலச்சிறை நாயனார் மதுரையில் சைவம் தழைக்க வித்திட்டவர். இவரை சுந்தரரும் ஒட்டக்கூத்தரும் பெருநம்பி என்று குறிப்பிடுகின்றனர்.

குலச்சிறை நாயனார் 63 நாயன்மார்கள் வரிசையில், இருபத்து ஒன்றாவது ஓராவது நாயன்மாராக சுந்தரரால் புகழப்படுகிறார்.

‘பெருநம்பி’ என்ற பட்டம் பாண்டிய மற்றும் சோழ நாடுகளில் சிறப்பாகச் செயல்பட்ட அமைச்சர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

ஒட்டக்கூத்தர் தாம் இயற்றிய தக்கயாகப் பரணியில் குலச்சிறையாரை பெருநம்பி என்னும் பட்டம் உடையவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Continue reading “குலச்சிறை நாயனார் – மதுரையில் சைவம் தழைக்க வித்திட்டவர்”

கனிம நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 14

கனிம நீர்

வந்த வேலை முடிந்தது. அந்த அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பேருந்து நிறுத்துமிடம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

அப்பொழுது மணி மதியம் 12-யை கடந்திருந்தது. வெயிலின் தாக்கமோ அதிகரித்திருந்தது.

வியர்வை ஊற்றெடுத்து எனது முகத்தை நனைத்தது. கைகுட்டையால் கழுத்திலும் முகத்திலும் சொட்டிக் கொண்டிருந்த வியர்வை துளிகளை நன்றாக துடைத்தேன். கைகுட்டை ஈரமானது.

Continue reading “கனிம நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 14”

மாசிலன் ஆதல் குறும்படம் விமர்சனம்

மாசிலன் ஆதல்

மாசிலன் ஆதல் குறும்படம் நவீனக் குறும்பட வரிசையில் ஒரு முக்கியமான படமாகும்.

விமர்சனத்திற்குப் போவதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி.

வசனங்கள் தரும் பொருளை மட்டும் கொண்டு, கதையைப் புரிந்து கொள்பவர்களா நீங்கள்?

அப்படியென்றால், நீங்கள் இந்த விமர்சனத்தைப் படிக்காமல் இந்தக் குறும்படத்தைப் பார்க்காமல் இப்படியே ஓடி விடுங்கள்.

வசனங்கள் அற்ற, பாதிக்கதை மட்டுமே கூறி, மீதியை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்றால், ’இந்த மாதிரிப் படங்களே நம் இலக்கிய அறிவுக்குச் சுவை’ என்பவர்கள் மட்டும், இப்படத்தையோ விமர்சனத்தையோ பார்க்கலாம், படிக்கலாம்.

இக்குறும்படம் நவீனமானது. சொல்லப்பட்ட முறையால், எடுக்கப்பட்ட விதத்தால், இசைக்கப்பட்ட இசையால்.

Continue reading “மாசிலன் ஆதல் குறும்படம் விமர்சனம்”

விவசாயி எதை இழந்தான்?

உரிமையை இழந்த விவசாயி

விவசாயி எப்படி இருந்தான்; ஏன் இன்று இழிநிலை அடைந்தான்? என்பதைச் சுருக்கமாகச் சொல்லும் கட்டுரை. படித்துப் பாருங்கள்; படித்ததை யோசித்துப் பாருங்கள்.

தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடி மன்னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனும்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடையர் ஆனாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே. (ஏரெழுபது.கம்பர்)

பாடலின் பொருள்

எல்லோரும் வணங்கும் குலத்தில் பிறந்தால் என்ன?

அரச குலத்தில் குலத்தில் பிறந்தால் என்ன?

வணிகர் அல்லது செல்வர் குலத்தில் பிறந்தால் என்ன?

இவர்களை எல்லாம் விட உழவர்களே மேலானவர்கள்.

ஏனென்றால் அவர்கள்தான் மனிதர்கள் உயிரோடு வாழ உணவு படைக்கின்றார்கள்.

இதுதான் விவசாயியின் அன்றைய நிலை.

இன்று இருப்பதோ அவல நிலை.

Continue reading “விவசாயி எதை இழந்தான்?”