மசாலா டீ செய்வது எப்படி?

மசாலா டீ
மசாலா டீ அருமையான சூடான பானம் ஆகும். இதனை வடநாட்டில் மசாலா சாய் என்றும் அழைப்பர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மசாலா டீ சாப்பிட்டிருக்கிறேன். அது மிகவும் அருமையாக இருந்தது.

மசாலா டீயில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியவை. வாரத்திற்கு ஒருமுறையோ இருமுறையோ இதனைச் செய்து அருந்தலாம்.

Continue reading “மசாலா டீ செய்வது எப்படி?”

சண்டேசுவர நாயனார் – சிவ அவமதிப்பிற்காக தந்தையை தண்டித்தவர்

சண்டேசுவர நாயனார்

சண்டேசுவர நாயனார் சிவ வழிபாட்டிற்காக வைத்திருந்த பாலை எட்டி உதைத்த தன் தந்தையின் காலை துண்டித்த மறையவர்.

சண்டிகேசர், சண்டேசர் என்று அழைக்கப்படும் இவரை சிவாலயங்களில் காணலாம். சிலர் கைதட்டி சாமி என்றும் கூறுவர்.

சண்டேசுவர நாயனார் சோழநாட்டில் உள்ள திருச்சேய்ஞலூர் என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விசாரசருமா என்பதாகும்.

Continue reading “சண்டேசுவர நாயனார் – சிவ அவமதிப்பிற்காக தந்தையை தண்டித்தவர்”

மின்னாற்பகுப்பு நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 12

மின்னாற்பகுப்பு நீர்

மின்னாற்பகுப்பு நீர் (Electrolysed water) மற்றும் அதன் பயன்கள் பற்றி சற்று முன்னர் தான் எதேச்சையாக படித்து அறிந்து கொண்டேன்.

ஆச்சரியப்பட்டேன்.

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பிலிருந்தே ஜப்பானிய மருத்துவ நிறுவனங்களிலும், பின்னர், உலக நாடுகளிலும் பல்வேறு தொழிற்துறைகளில் மின்னாற்பகுப்பு நீர் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இப்பொழுதுதான் எனக்கு தெரியும்.

இந்த செய்தியை உடனே ’நீருக்கு’ தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது.

’என்ன செய்வது’ என்று தெரியவில்லை. இதுவரையிலும் நீர் தான் தானாக என்னிடம் வந்து பேசியது.

Continue reading “மின்னாற்பகுப்பு நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 12”