வாழைப்பூ சூப் செய்வது எப்படி?

வாழைப்பூ சூப்
வாழைப்பூ சூப் ஆரோக்கியமான சூப் ஆகும். வாழைப்பூவினை சுத்தம் செய்து சமைக்க நேரமாகும் என்பதால், நம்மில் பலரும் இதனை ஒதுக்கி விடுவது உண்டு. ஆனால் சத்துக்கள் நிறைந்த வாழைப்பூவினை நம் உணவில் அடிக்கடி சேர்ப்பது உடல்நலத்திற்கு மிகவும் சிறந்தது.

வாழைப்பூவினை சுத்தம் செய்யும் போது உள்ள வெள்ளை மடல் பகுதிகளை வீண் செய்யாமல் சூப் தயார் செய்து அருந்தலாம்.

துவர்ப்பு சுவையை உணவில் சேர்ப்பது அவசியம். அதற்கு வாழைப்பூவினை உணவாகப் பயன்படுத்தலாம்.

வாழைப்பூவினைக் கொண்டு வாழைப்பூ குழம்பு, வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை உள்ளிட்ட உணவுகளைத் தயார் செய்யலாம்.

இனி எளிய முறையில் சுவையான வாழைப்பூ சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Continue reading “வாழைப்பூ சூப் செய்வது எப்படி?”

திருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்

திருநாளைப் போவார் நாயனார்

திருநாளைப் போவார் நாயனார் இறையருளால் நந்தி விலக இறை தரிசனம் பெற்றவர். உண்மையான பக்தியினால் தீயில் குளித்து புனிதரானவர்.

திருநாளைப் போவார் நாயனாரின் இயற்பெயர் நந்தனார் என்பதாகும். இவர் சோழநாட்டின் ஒரு பிரிவாக விளங்கிய மேற்கா நாட்டில் உள்ள ஆதனூர் என்னும் ஊரில் பிறந்தார்.

ஆதனூர் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகே அமைந்துள்ளது.

Continue reading “திருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்”

நீருடன் ஓர் உரையாடல் 10 – வெந்நீர்

வெந்நீர்

பகல் ஒரு மணி இருக்கும். அது கத்திரி வெயில் காலம் வேறு.

மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. அப்பொழுது நிலவிய வெப்பத்தை தாங்க முடியவில்லை. எனது தலையிலிருந்து காதின் ஓரமாக வியர்வை வழிந்து கொண்டிருந்தது.

வியர்வையை கையால் துடைத்துக் கொண்டு எனது கழுத்தையும் துடைத்தேன். வியர்வை காய்ந்து, உப்பு படர்ந்திருந்தது.

எழுந்து வீட்டின் பின்புறம் சென்றேன். அங்கிருந்த குழாயை திறந்து இரண்டு கரங்களையும் நீட்டினேன். குழாயிலிருந்து ஊற்றிய நீரை பிடித்தேன்.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 10 – வெந்நீர்”

முதலை – ஊர்வன அரசன்

முதலை
முதலை என்றதும் அதனுடைய விரிந்த வாயும் கோரமான பற்களுமே ஞாபகத்திற்கு வரும். ஊர்வன வகையைச் சார்ந்த இவ்விலங்கு அபார தாக்கும் திறனும் வலிமையான கடிக்கும் திறனும் கொண்டுள்ளதால் ஊர்வன அரசன் என்று அழைக்கப்படுகிறது.

முதலையினம் சுமார் 24 கோடி ஆண்டுகளாக இப்பூமியில் வசித்து வருகின்றது. அதாவது டைனோசர்கள் வாழ்ந்த மெசோசோயிக் சகாப்தத்திலிருந்து முதலைகள் இப்புவியில் வாழ்ந்து வருகின்றன.

Continue reading “முதலை – ஊர்வன அரசன்”