பிரட் மசாலா செய்வது எப்படி?

சுவையான பிரட் மசாலா
பிரட் மசாலா எளிதாகச் செய்யக் கூடிய அருமையான சிற்றுண்டி. இதனை மாலை நேரத்தில் செய்து உண்ணக் கொடுக்கலாம். 

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இடைவேளை உணவாகவும் இதனைக் கொடுத்து அனுப்பலாம்.

வீட்டில் உள்ள மசாலாப் பொருட்களை வைத்து செய்யப்படுவதால் இது சுகாதாரமானது. மசாலா சுவை விருப்புபவர்கள் இதனுடைய ரசிகர்களாக மாறி விடுவர்.

Continue reading “பிரட் மசாலா செய்வது எப்படி?”

மூர்த்தி நாயனார் – முழங்கையை அரைத்து காப்பிட முனைந்தவர்

மூர்த்தி நாயனார்

மூர்த்தி நாயனார் இறைவனுக்கு சந்தனக் காப்பிட தன்னுடைய முழங்கைகளை அரைத்தவர். இறையருளால் அரச பதவி பெற்ற வணிகர்.

மூர்த்தி நாயனார் தமிழ் வளர்த்த மதுரையில் வணிகர் குலத்தில் தோன்றினார். மதுரை ஆலவாய் அண்ணலிடம் பேரன்பு கொண்டிருந்தார்.

பெரும் வணிகராய் இருந்த போதிலும் தினமும் மதுரை சொக்கேசருக்கு சந்தனப்பிடுவதற்கு, சந்தனக் கட்டை அரைத்து தரும் பணியைச் செய்து வருவதை குறிக்கோளாய் கொண்டிருந்தார்.

Continue reading “மூர்த்தி நாயனார் – முழங்கையை அரைத்து காப்பிட முனைந்தவர்”

நீருடன் ஓர் உரையாடல் 8 – கடின நீர்

கடின நீர்

அம்மா சொன்ன மளிகைப் பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

கதவை திறந்து உள்ளே நுழைந்தேன். கையிலிருந்த மளிகைப் பொருட்களை நிர‌ம்பிய பையை வாசற்படியருகே வைத்துவிட்டு, இடது புறம் இருந்த குழாய் அருகில் சென்றேன்.

கைகளை சோப்பு போட்டு நன்றாக சில நிமிடங்கள் தேய்த்துக் கொண்டு பின்னர் குழாய் நீரில் கழுவினேன்.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 8 – கடின நீர்”

மின்மினிப் பூச்சி ஏன் ஒளிர்கிறது?

மின்மினிப் பூச்சி ஏன் ஒளிர்கிறது?

மின்மினிப் பூச்சி ஏன் ஒளிர்கிறது? என்ற கேள்வி, தூங்கணாங்குருவியைப் பற்றி அம்மா சொல்லிக் கொண்டிருந்த போது எனக்குள் தோன்றியது.

“தூங்கணாங்குருவி, குஞ்சுகளுக்கு வெளிச்சம் தருவதற்காக ஈரக் களிமண்ணைத் தோண்டி எடுத்து கூட்டில் வைத்து, அதில் மின்மினிப் பூச்சியை பொதிந்து வைக்குமாம்.” என்று அம்மா தான் கேள்விப்பட்டிருப்பதாகக் கூறினார்.

காரணம் மின்மினிப் பூச்சியும் தூங்கணாங்குருவியும் மாசுபடாத நீருள்ள ஈரப்பதமான இடங்களையே வாழிடங்களாகக் கொண்டவை.

Continue reading “மின்மினிப் பூச்சி ஏன் ஒளிர்கிறது?”