கொரோனா பாதிப்பு காரணமாக

லயோலா கல்லூரி, சென்னை

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

கொரோனா பாதிப்பு காரணமாக, கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்தத் தேவையில்லை

சரி – 68% (26 வாக்குகள்)

தவறு – 32% (12 வாக்குகள்)

உலகின் பசுமை நாடுகள் 2020

உலகின் பசுமை நாடுகள் 2020

உலகின் பசுமை நாடுகள் 2020 பட்டியலை யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழங்கள் இணைந்து ஆய்வு நடத்தி சமீபத்தில் வெளியிட்டுள்ளன.

இந்த ஆய்விற்கு 180 நாடுகளின் சுற்றுசூழல் மற்றும் அதனுடைய செயல்திறன் கணக்கில் கொள்ளப்பட்டன.

இப்பட்டியலில் முதல் பத்து இடங்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன. இப்பட்டியலில் இந்தியா 169-வது இடத்தையும், ஐக்கிய அமெரிக்கா 24-வது இடத்தையும், சீனா 120-வது இடத்தையும், பாகிஸ்தான் 142-வது இடத்தையும் பிடித்துள்ளன.

Continue reading “உலகின் பசுமை நாடுகள் 2020”

பூசணி விதை – இயற்கை தூக்க மாத்திரை

பூசணி விதை

பூசணி விதை உடல்நலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைய‌ கொண்டுள்ளது. இந்த சிறிய விதைக்குள் உள்ள அபரிதமான சத்துக்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.

என்னுடைய பள்ளிப் பருவத்தில் நண்பன் கொடுத்து இதனை தின்றிருக்கிறேன். அவனுடைய அம்மா சமையலுக்கு வாங்கிய பூசணிக்காயில் இருந்த விதைகளை, விறகு அடுப்பு சாம்பலில் தோய்த்து உலர வைத்துப் பதப்படுத்தியதாகக் கூறினான். லேசான இனிப்புச் சுவையுடன் அருமையாக இருந்தது.

Continue reading “பூசணி விதை – இயற்கை தூக்க மாத்திரை”

பால்பன் செய்வது எப்படி?

பால்பன்

பால்பன் தித்திப்பான இனிப்பு வகை ஆகும். கடைகளில் தட்டில் அடுக்கி வைக்கப்பட்டு, மேலே கெட்டியாக படிந்துள்ள சர்க்கரை பாகினை பார்க்கையிலேயே, அதனை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் உண்டாகும்.

பொதுவாக இதனைச் செய்வதற்கு மைதாவே பயன்படுத்துவர். இந்த பதிவில் மைதாவிற்கு பதில் கோதுமை மாவினைக் கொண்டு பால்பன்னைத் தயார் செய்துள்ளேன்.

இனி சுவையான பால்பன்னினை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பால்பன் செய்வது எப்படி?”

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

கோழி சிலம்ப சிலம்பும் குருகு எங்கும்

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும் என்ற இப்பாடல் திருவெம்பாவையின் எட்டாவது பாடல் ஆகும்.

திருவெம்பாவை தென்பாண்டி நாட்டைச் சார்ந்த திருவாதவூரார் என்று அழைக்கப்படும் மாணிக்கவாசகரால், உலக உயிர்களின் அறியாமை இருளினை நீக்கும் இறைவனான சிவபெருமானின் மீது பாடப்பட்டது. Continue reading “கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்”