மானே நீ நென்னலை நாளை வந்து

மானே நீ நென்னலை நாளை வந்து

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை என்ற இப்பாடல் திருவெம்பாவையின் ஆறாவது பாடல் ஆகும்.

திருவெம்பாவை சைவ சமய குரவரர்களில் ஒருவரான திருவாதவூரார் என்று அழைக்கப்படும் மாணிக்கவாசகரால், உலக உயிர்கள் உய்யும் பொருட்டு அருளை வழங்குகின்ற இறைவரான சிவபெருமானின் மீது பாடப்பட்டது. Continue reading “மானே நீ நென்னலை நாளை வந்து”

அதிர்ஷ்டம் எது? பேரதிர்ஷ்டம் எது?

அதிர்ஷ்டம்

முற்றுப் பெறாத தேவைகளின் முடிவில்லாத தேடலில்தான் வாழ்க்கையின் சூட்சமமே அடங்கியுள்ளது.

பணத்தை, நிம்மதியை, கேளிக்கையை, ஆரோக்கியத்தை என எதையாவது ஒன்றைத் தேடிய வண்ணமே நமது வாழ்க்கை ஓடுகிறது.

ஒரு மனிதனுக்கு தேடல் மட்டும் இல்லையென்றால் அதற்குப் பிறகு அவன் வாழ்வதற்கான அர்த்தமில்லாமல் போகும். வாழ்வே சுவையிழக்கும். சுற்றியுள்ளவர்களையும் தொந்தரவு செய்யும்.

Continue reading “அதிர்ஷ்டம் எது? பேரதிர்ஷ்டம் எது?”

சொர்க்க வனம் 2 – பயணம் ஆரம்பம்

பயணத்தை தொடங்கியது குருவிக்கூட்டம்

அன்று இரவு எட்டு மணி….

பனிப்பொழிவு சற்று அதிகரித்திருந்தது.

திட்டமிட்டப்படி, தலைவன் இருன்டினிடே அந்த மரத்தடியில் வந்து நின்றுக் கொண்டிருந்தது. அதனை தொடர்ந்து அக்கூட்டத்திலிருந்த எல்லா ஸ்வாலோ குருவிகளும் அங்கு வந்து சேர்ந்தன. Continue reading “சொர்க்க வனம் 2 – பயணம் ஆரம்பம்”

மாங்கா(க்கா) சிறுவன் – சிறுகதை

மாங்கா

“டேய் ஒழுங்கா யார்கிட்டேயும் வம்பு பண்ணாம விளையாடிட்டு வரணும்டா”, அம்மாவின் எச்சரிக்கை ஒலிக்க, அந்த குடிசையை விட்டு வெளியே வந்தான் அவன்.

“சரி மா”, வேக வேகமாக பதில் சொல்லிவிட்டு வெளியே செல்ல துடித்த அவன் கால்களை அந்த குட்டி குரல் தடுத்தது.

“அண்ணே! அண்ணே! நானும் வரேன், கூட்டிகிட்டுப் போண்ணே”, கத்திக் கொண்டே அவன் பின்னால் ஓடினாள் அவள்.

அண்ணனும் தங்கையும் கிளம்பிவிட்டார்கள். Continue reading “மாங்கா(க்கா) சிறுவன் – சிறுகதை”