உலகின் பசுமை நாடுகள் 2020 பட்டியலை யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழங்கள் இணைந்து ஆய்வு நடத்தி சமீபத்தில் வெளியிட்டுள்ளன.
இந்த ஆய்விற்கு 180 நாடுகளின் சுற்றுசூழல் மற்றும் அதனுடைய செயல்திறன் கணக்கில் கொள்ளப்பட்டன.
இப்பட்டியலில் முதல் பத்து இடங்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன. இப்பட்டியலில் இந்தியா 169-வது இடத்தையும், ஐக்கிய அமெரிக்கா 24-வது இடத்தையும், சீனா 120-வது இடத்தையும், பாகிஸ்தான் 142-வது இடத்தையும் பிடித்துள்ளன.