காலாற நடந்து கழனி காடு தேடி
காலைக்கடன் முடித்தது முடிந்து
படுக்கை அறைக்கு பக்கத்திலேயே
நெருங்கி வந்து நெளிகிறது வளர்ச்சி…
வனத்துக்குள் கொஞ்சம் வானம் – கவிதை
மானுடத்தின் வாச மற்ற பகுதிகளில்
வாழ்வியலை நடத்தவே விழைகிறது வனம்
Continue reading “வனத்துக்குள் கொஞ்சம் வானம் – கவிதை”பூமத்திய ரேகை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
பூமத்திய ரேகை அல்லது நிலநடுக்கோடு என்பது பூமியை குறுக்குவாக்கில் இரு சமதுண்டுகளாகப் பிரிக்கும் கற்பனைக் கோடு ஆகும். இக்கோட்டிலிருந்து வடதுருவமும் தென்துருவமும் சமதூரத்தில் இருக்கின்றன.
இக்கோடு புவியை வடஅரைக்கோளம், தென்அரைக்கோளம் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. இது பூஜ்ஜியம் டிகிரி அட்சரேகை என்று அழைக்கப்படுகிறது. இக்கோடு 5கிமீ அகலத்தில் குறிக்கப்படுகிறது.
Continue reading “பூமத்திய ரேகை பற்றி அறிந்து கொள்ளுங்கள்”அலையாத்திக் காடுகள் அவசியம். ஏன்?
அலையாத்திக் காடுகள் ஆற்றுநீர் கடலோடு கலக்கும் இடங்களில் வளரும் இயற்கை அரண்கள்.
கடலில் உண்டாகும் அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தும் தன்மையை உடையதால் இவை அலை ஆத்திக் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆத்துதல் என்பதற்கு மட்டுப்படுத்துதல் அல்லது குறைத்தல் என்பது பொருளாகும்.
இவை உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கடலோரப் பகுகளில் மட்டும் காணப்படுகின்றன. புவியில் உள்ள முக்கியமான சூழல் அமைப்புகளில் இதுவும் ஒன்று.
Continue reading “அலையாத்திக் காடுகள் அவசியம். ஏன்?”தனி மரம் – சிறுகதை
ஒரு பெரிய ஆலமரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான் கருப்பசாமி. நான் பக்கத்தில் போனேன்.
“வாடா சாப்பிடாலாம்னு” சொன்னான். “பரவாயில்லை வேணாம்” என்றேன்.
கல்லூரியில் தமிழ்த்துறையில் ஒரே வகுப்பில் படித்தோம். பத்து பதினைந்து வருடங்களுக்கு பிறகு இப்போது தான் அவனைச் சந்திக்கிறேன்.
Continue reading “தனி மரம் – சிறுகதை”