சிரிப்பைத் தொலைத்த சிற்றீசல் – கவிதை

புற்றுக்குள் இருந்து நான்

புறப்பட்ட வேளையிலே

என் மரணம் ஒரு நாளில் என்று

எழுதப்பட்ட போதினிலும்

என் காலக் கதவோரம்

நின்றென்னைக் கவ்வக் காத்திருக்கும்

சில காட்டேரிகள்!

எப்படி சிரிக்க நான்?

Continue reading “சிரிப்பைத் தொலைத்த சிற்றீசல் – கவிதை”

யாரின் பிழை – கவிதை

இதமான சூழ்நிலை இருண்ட சூழ்நிலையாகி

வளமான தேசம் வறண்ட தேசமாகி

உழவர்க‌ள் வயலில் உழுத காலம் போய்

நோயின் பிடியில் விழுந்த காலம் வந்து

Continue reading “யாரின் பிழை – கவிதை”

மகளின் பிறந்த நாள் வாழ்த்து

என் உயிர் தந்த என் உயிருக்கு

உயிர் வந்த நாள் இன்று!

கண்ணுக்குள் வைத்தென்னைக் காப்பாற்றும்

கண்மணி அவள் கண்விழித்த நாள் இன்று!

Continue reading “மகளின் பிறந்த நாள் வாழ்த்து”

தமிழா?அமிழ்தா? – கவிதை

தமிழ்

செந்தமிழே! என் தமிழே!
தித்திக்கும் செங்கரும்பை ஒத்தவளே
தேன் சிந்தும் கலையழகு கொண்டவளே

எத்திக்கும் என் நா மணக்கும் மலர்தமிழே
புத்திக்குள் புகுந்தென்னை கவிப்பூவுலகில்
கால்பதிக்க வைத்த வளர்தமிழே

சித்திர செவ்விதழ்கள் பல
சித்தரிக்கும் என் தமிழே
கத்தரி வெயிலிலும் எமை
உறையச் செய்யும் பனித்தமிழே

Continue reading “தமிழா?அமிழ்தா? – கவிதை”

பூங்கொடிக்கு பொன்கவிதை

கருவறையில் சுமந்தவளே
எனைக் காப்பாற்றும் உமையவளே
உடம்புக்குள் என்னை வைத்து
உயிரோடு சேர்த்தணைத்து

உதிரத்தை பாலாக்கி
எனை உலகறிய தந்தவளே
தூக்கத்தை நீ தொலைத்து
துணிவுடனே இருந்திங்கே
எனைத் தோரணையாய் வளர்த்தவளே

Continue reading “பூங்கொடிக்கு பொன்கவிதை”