தி கால் குறும்படம் விமர்சனம்

தி கால்

தி கால் குறும்படம் மனித உணர்வுகளைப் பதம் பார்க்கும் ஆங்கில மொழிக் குறும்படம் ஆகும்.

இதன் இயக்குனர் ‘அம்மர் சோண்டர்பெர்க்‘ ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு இளம் திரைப்படத் தயாரிப்பாளர்.

2007 ஆம் ஆண்டில் அவர் தனது முதல் படத்திற்கான பரிசை வென்றார். அப்போதிருந்து அவரது படங்கள் பார்வையாளர்களிடையே உணர்ச்சிகளைத் தூண்டின.

அவரது குறிப்பிட்ட ஒரு குறும்படம் ‘ஒரு மகளிடமிருந்து கடிதம்’. இது சில நாட்களில் தயாரிக்கப்பட்டது ஒரு சாதனையாகும்.

இக்குறும்படம் சமூக ஊடகங்களில் பல மில்லியன் முறை பார்க்கப்பட்டு பகிரப்பட்டது.

Continue reading “தி கால் குறும்படம் விமர்சனம்”

மகாபாரதப் போருக்கு யார் காரணம்? – யோசித்துப் பாருங்கள்

மகாபாரதப் போருக்கு யார் காரணம்

மகாபாரதப் போருக்கு யார் காரணம் என்ற கேள்விக்கான பதில், மகாபாரதம் படித்த அல்லது கேட்ட அல்லது பார்த்த‌ அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் நமது பதிலை மறுபரிசீலனை செய்ய வைக்கிறார். அதற்காக மகாபாரதத்தில் சகாதேவனுக்கும் கண்ணனுக்கும் இடையே நடந்த உரையாடலை முன்வைக்கிறார்.

Continue reading “மகாபாரதப் போருக்கு யார் காரணம்? – யோசித்துப் பாருங்கள்”

ஏனாதிநாத நாயனார் – உயிர் கொடுத்த உத்தமர்

ஏனாதிநாத நாயனார்

ஏனாதிநாத நாயனார் திருநீறு அணிந்து சிவனடியார் வேடமிட்டு போரிட வந்த பகைவரை, சிவனடியாராகக் கருதி திருநீறு அணிந்திருந்த காரணத்தால் எதிர்க்காது இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்.

புகழ்பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். ஆவரின் கதையை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஏனாதிநாதர் கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஏனநல்லூர் என்னும் ஊரில் பிறந்தார். ஏனநல்லூர் முற்காலத்தில் எயினனூர் என்று அழைக்கப்பட்டது.

Continue reading “ஏனாதிநாத நாயனார் – உயிர் கொடுத்த உத்தமர்”

பிரியங்கா சோப்ரா – சிறுகதை

பிரியங்கா சோப்ரா

ஜம்முக்கும் காஷ்மீருக்கும் நடுவில் இருக்கிறது இந்த ஊர். இங்கு பெருமளவில் எதுவும் தீவிரவாத செயல்கள் நடைபெறுவதில்லை. இருப்பினும், இது தீவிரவாதிகளின் உறைவிடம்.

இங்கு இருந்துதான் எல்லாவற்றையும் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள். அதனால் இங்கு இருக்கும் அனைத்து படைப்பிரிவுகளும் மிகவும் கவனமாக இருக்கும்படி உத்தரவு. Continue reading “பிரியங்கா சோப்ரா – சிறுகதை”