சு.வெங்கடேசன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

சு.வெங்கடேசன் உரை

சு.வெங்கடேசன் உரை முதலாவது விருதுநகர் புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளை சிறப்பித்தது.

‘வீரயுக நாயகன் வேள்பாரி’ படித்த நாளில் இருந்தே நான் பார்க்கத் துடித்த, சு.வெ என தமிழ் இலக்கிய உலகம் அறியும் சு. வெங்கடேசன் அவர்களின் உரை “இலக்கியமும் வரலாறும்” எனும் தலைப்பில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

Continue reading “சு.வெங்கடேசன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா”

எஸ்.ராமகிருஷ்ணன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

எஸ்.ராமகிருஷ்ணன் உரை

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் முதலாவது விருதுநகர் புத்தகத் திருவிழாவில் 18.11.2022 அன்று நினைவின் சித்திரங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

எஸ்.ராமகிருஷ்ணன் உரை கேட்ட அனைவரையும் சுமார் ஒரு மணி நேரம் கட்டிப்போட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

Continue reading “எஸ்.ராமகிருஷ்ணன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா”

இன்ஸ்பயரிங் இளங்கோ – நேர்மறையான பதில்

இன்ஸ்பயரிங் இளங்கோ

சரித்திர சிறப்பு மிக்க அந்த கலை அறிவியல் கல்லூரியில் அன்று வித்தியாசமான பகடிவதை ஒன்று நடந்தது.

பகடிவதை என்றதும் பயந்து விடாதீர்கள். ‘ராக்கிங்‘ தான்.

அதாவது முதலாமாண்டு பி.ஏ ஆங்கிலம் படிக்கும் ஒரு மாணவனை, மூன்றாம் ஆண்டு பி.ஏ ஆங்கிலம் படிக்கும் சீனியர் மாணவர் கூட்டம் வதை செய்யும் பொருட்டு அங்கே காத்திருந்தது.

ஏனென்றால் இந்த முதலாமாண்டு மாணவன் கிராமபுறத்தில் இருந்து வந்து கல்லூரியில் சேர்ந்திருந்தாலும் அனைவரிடமும் ஆங்கிலத்தில்தான் உரையாடுவானாம்.

Continue reading “இன்ஸ்பயரிங் இளங்கோ – நேர்மறையான பதில்”

பெட்டிக்கு வெளியே சிந்திப்பது என்றால் என்ன‌?

பெட்டிக்கு வெளியே சிந்திப்பது என்றால் என்ன?

மாத்தி யோசி என்பதுதான் அது.

வழக்கமான சிந்தனை என்பதைப் பெட்டிக்குள் சிந்திப்பது (Thinking inside the box) என்று சொல்வார்கள்.

வரையறுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி, புதிதாக மாற்றி யோசிப்பதை பெட்டிக்கு வெளியே சிந்திப்பது (Thinking outside the box) என்பார்கள்.

16.02.2022 அன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பேராசிரியர்களுடன் “பெட்டிக்கு வெளியே சிந்திப்போம்” எனும் தலைப்பில் விவாதிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Continue reading “பெட்டிக்கு வெளியே சிந்திப்பது என்றால் என்ன‌?”

மண்பானை நீர் ஏன் குளிர்கின்றது?

மண்பானை நீர்

வாட்சப்பில் இப்பொழுதெல்லாம் ரொம்ப நல்ல நல்ல விச‌யங்கள் வலம் வருகின்றன‌. சமீபத்தில் அப்படி என்னைக் கவர்ந்த ஒரு பதிவு.

ஒருவன் மண்பானையிடம் கேட்டான் “இந்த கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்று இருக்கின்றாய்?” என்று.

அதற்கு மண்பானை “எனது ஆரம்பமும் முடிவும் மண்தான் என்பது எனக்குத் தெரியும். எவனொருவன் தனது ஆரம்பத்தையும் முடிவினையும் உணர்ந்திருக்கின்றானோ! அவன் ஏன் சூடாகப் போகிறான்? எப்போதும் குளிர்ந்தே இருப்பான்” என்றது.

Continue reading “மண்பானை நீர் ஏன் குளிர்கின்றது?”