கொரோனா நோயும் கொல்லும் பார்வையும்

கொரோனா நோயும் கொல்லும் பார்வையும்

கொரோனா நோயும் கொல்லும் பார்வையும் கழுத்தை நெறிக்கக் கதறும் மக்கள் பற்றியே இதில் பேசப் போகிறேன்.

2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா, தற்போது உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி கொண்டிருக்கின்றது. அது இந்தியாவையும் அதன் பொருளாதாரத்தையும் விட்டு வைக்கவில்லை.

இந்நேரத்தில் மக்கள் கொரோனா நோயினை கண்டு பயப்படுகிறார்கள். மற்றவர்களிடம் இருந்து நோய்  நமக்குத் நோய் தொற்றிவிடுமோ என்று அஞ்சி நடுங்குகிறார்கள்.

அச்சத்தால் ஒரு மனிதன் சக மனிதனை விலக்குகிறான். Continue reading “கொரோனா நோயும் கொல்லும் பார்வையும்”

உன்னத உறவு

உன்னத உறவு

சத்தமில்லாமல் அறையின் கதவை மெதுவாகத் திறந்தான் குமார். தந்தையின் சட்டைப் பையிலிருந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை தெரியாமல் எடுத்து அறையிலிருந்து விரைந்தான்.

அவன் முகம் மழையில் நனைந்த மரம் மழைநீரைச் சொட்டுவது போல, பயத்தில் வியர்வை சொட்டுக்களை வெளியேற்றியது. இரவு நேரம் என்பதால் அமைதி சூழ்ந்திருந்தது. Continue reading “உன்னத உறவு”

மதிப்பாக உணர்ந்தால்

பேனா

பணக்காரர் ஒருவருக்கு ஒரு பிரச்சினை இருந்தது. அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.

இந்தப் பிரச்சினையப் போக்க வெளியூரில் இருக்கும் தன் நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். நண்பர் ஒரு வித்தியாசமான யோசனை சொன்னார். Continue reading “மதிப்பாக உணர்ந்தால்”

காத்திருக்கும் நான்

வாய்ப்புக்கள் என்னும் வரம்

தனிமைதான் எனக்கு நிரந்தரம் என்று ஆனது

யாரிடமும் எதுவும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை

நலம் கேட்போரின் வார்த்தையில் உயிரோட்டம் இல்லை

சின்ன சின்ன சந்தோச‌ங்களுக்கு மனம் ஆசைப்படுகிறது

ஐந்து வருடம் காப்பாற்றிய கவுரவம் காற்றில் போனது

 

மௌனத்தை என் மீது திணித்தது வாழ்க்கை

இங்கு எது பேசுவதற்கும் யோசனையாக இருக்கிறது

என் பொறுப்புகளை கையாள வழி தேடுகிறது மனசு

நம்பிக்கை கொண்ட மனத்திற்கு பாதை எங்கும் வழிகள்

என்ற கூற்று என் முன்னே பொய்த்து போனதோ?

 

கணவனாக, தந்தையாக, மகனாக, நல்ல உறவாக

என் பொறுப்புகள் செய்யப்படாமல் கிடக்கின்றன‌

சார்ந்து இருந்து பழக்கப்படாத மனது

உறவுகள் செய்யும் உதவியில் தொய்மை அடைகிறது

சோதனைகளை சாதனைகளாக்கும் என் மனதிற்கு

இப்பொழுது ஒய்வு காலமாக இருக்கிறது

 

மறுபடியும் வாய்ப்பிற்கு காத்திருக்கிறேன் நான்

என் உறவுகளுக்கு என்ன நலமானது பண்ண முடியுமோ

அதனை முடிக்க தருணம் வரும் வரை காத்திருக்கிறேன்

 

வாழ்க்கை என்னை மறுபடியும் புடம் போடுகிறது

எங்கு வீழ்த்தப்பட்டேனோ அங்கேயே மீண்டும் எழுவேன்

நான் பக்குவப்பட‌ இயற்கை தடைகளைக் கொடுக்கிறது

நான் பக்குவப்பட‌ இயற்கை தனிமையைக் கொடுக்கிறது

இதனை சாபமாகக் கருதாமல் வரமாகக் கொள்வேன்

 

வெற்றி தோல்வி காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டவை

என்ற நியதி உணர இயற்கை தனிமை தருகிறது

என்னை சுற்றி எது நடந்தாலும் நடக்கட்டும்

சூழ்நிலையால் பாதிக்கப்படும் கைதியல்ல நான்

வாய்ப்புகளை வரமாக மாற்ற இன்னும்

இனிய பக்குவத்திற்கு காத்திருக்கும் நான்

 சிறுமலை பார்த்திபன்