16 – முதல் 19 -ம் நூற்றாண்டு வரையிலான ஆங்கிலக்கவிதைகள்

16 - முதல் 19 -ம் நூற்றாண்டு வரையிலான ஆங்கிலக்கவிதைகள்

16 – முதல் 19 -ம் நூற்றாண்டு வரையிலான ஆங்கிலக்கவிதைகள் என்ற நூலின் மதிப்புரை.

வெளி நாட்டுப் புலவர்கள் பாடிய ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்பே இந்நூல்.

ஆசிரியர்: ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

கவிதைகளுக்கு மொழிகள் வெவ்வேறாய் இருக்கலாம். ஆனால், கவிஞனின் மொழி ஒன்று தான். அதை ஒத்த மனத்துடையார் அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும்.

பல காலகட்டத்திலும் வந்த சிறந்த கவிஞர்களின் உணர்வுகளின் தொகுத்த பதிவு. உதாரணத்திற்கு, ரொமான்டிக் இலக்கியத்தின் மூலவரான வில்லியம் வெர்ட்ஸ்வர்த் எழுதிய கவிதைகள் இதில் உள்ளன. Continue reading “16 – முதல் 19 -ம் நூற்றாண்டு வரையிலான ஆங்கிலக்கவிதைகள்”

தேன் மயங்கு பாலினும் இனியவள்

தேன் மயங்கு பாலினும் இனியவள் என்பது தமிழ்ப் பெண்ணின் சிறந்த குணங்களைச் சொல்லும் கவிதை வரி ஆகும். அது பற்றிய விளக்கத்தை இந்தக் கட்டுரை கொடுக்கின்றது. Continue reading “தேன் மயங்கு பாலினும் இனியவள்”

காதல் பாட்டு

காதலர்கள்

குயில் பாட்டு என்னும் நூலில் பாரதி பாடும் காதல் பாட்டு. நூறு ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் இளமையோடு இருக்கும் இனிய பாட்டு.

காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். … (காதல்) Continue reading “காதல் பாட்டு”

கிராமத்துக் காதலர்கள்

அரசுப் பேருந்து

ஆண்:

ஒண்ணாம் நம்பர் பஸ்ஸிலேறி ஓடிப் போலாமா – இல்ல
ஒங்கப்பனுக்கு பயந்துகிட்டு ஒளிஞ்சிருப்போமா?
என்னதான் நடக்குமின்னு எதிர்த்து நிப்போமா? – இல்ல
எதுக்கு நமக்கு வம்புன்னு தான் ஒதுங்கிப் போவாமா? Continue reading “கிராமத்துக் காதலர்கள்”