உஷ்! சைலன்ஸ் ப்ளீஸ்!

உஷ்!சைலன்ஸ் ப்ளீஸ்

உஷ்!

சப்தமெழுப்பாதீர்
அமைதி காத்திடுவீர்…
ஒன்றல்ல இரண்டல்ல
லட்சக் கணக்கில்
விரல்தொட்ட வாக்குகளை
வயிற்றில் தாங்கும்
இ.வி.எம்.களைத்
தன் வயிற்றில்
சுகமான சுமையென
சுமப்பதே சுகமென
சுமந்து நிற்கும்
சீல் கொண்ட பெட்டிகள்…

Continue reading “உஷ்! சைலன்ஸ் ப்ளீஸ்!”

விழிகளைச் சேருமோ உறக்கம்?

விழிகளைச் சேருமோ உறக்கம்?

இடப்பக்கம் வலப்பக்கம் என்று மாறி மாறிப் புரண்டு படுத்தார் செல்லம்மா. தூக்கம் வருவேனா என்றது.

கடந்த ரெண்டு வருட காலமாகவே இரவில் மாமி தூக்கம் வராமல் தவிப்பது வாடிக்கையாகி விட்டது.

Continue reading “விழிகளைச் சேருமோ உறக்கம்?”

தமிழ்ப் புத்தாண்டே வருக!

பூவெனப் பூத்தது புதுவருடம்…
புன்னகை காட்டுது
தமிழ்வருடம் “குரோதி” என்ற பெயரோடு
பிறந்தது பிறந்தது புதுவருடம்…
வளமும் நலமும் தினம் தினமே
இனி வந்தே சேரும் இதுநிஜமே

வசந்தம் எனும் பெருமகிழ்வை
நம் இல்லம்தோறும் தந்திடுமே
வறுமையில்லா வாழ்வுதனை
ஈந்தே மகிழ்வை அளித்திடுமே

Continue reading “தமிழ்ப் புத்தாண்டே வருக!”

செத்தாண்டா சேகரு!

கைகால்களைப் பரத்திப் போட்டபடி சற்றே வாய் திறந்திருக்க லேசானக் குறட்டையோடு மல்லாந்து படுத்தபடி தூங்கிக் கொண்டிருந்தான் சேகர்.

Continue reading “செத்தாண்டா சேகரு!”

காராம் பசுவும் கமலா மாமியும்

காராம் பசுவும் கமலா மாமியும்

காலை மணி பதினொன்று.

சமையலறையிலிருந்து ப்ளாஸ்டிக் பக்கெட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்த கமலா மாமி வாசல் கதவைத்திறக்க தாழ்ப்பாளைத் தொட்டபோது, டிவியில் ந்யூஸ் சேனல் பார்த்துக் கொண்டிருந்த ராமசுப்பு டிவியிலிருந்து கண்களை நகர்த்தி கழுத்தைத் திருப்பி, “கமலா எங்க போற?” என்று கேட்டார்.

Continue reading “காராம் பசுவும் கமலா மாமியும்”