வாய் முகூர்த்தம் – சிறுகதை

வாய் முகூர்த்தம் - சிறுகதை

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு, நான் அவரை சந்தித்தேன். அவர் வேறு யாரும் இல்லை எனது சித்தப்பாதான்.

என் அப்பாவின் உடன் பிறந்த தம்பி. இருவருக்குள்ளும் தாய் வழி உறவுதானே தவிர, தந்தை வழி உறவு கிடையாது.

எனது இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி அவரது வீட்டுக்குள் சென்றேன்.

வீட்டில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என உறவினர்கள் அமர்ந்திருந்தார்கள்.

அந்த கூட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்தார் அவர்.

நான் அவர் அருகில் சென்றுதான் நின்று கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. 

Continue reading “வாய் முகூர்த்தம் – சிறுகதை”

மாறாத நினைவுகள்- கவிதை

உன்னுடன் நான் பேசிய நினைவுகள்

நாம் சண்டையிட்ட தருணங்கள்

என்னை மாட்டிவிட்ட குறும்புகள்

எனக்காக பழியேற்ற தைரியம்

உடன் விளையாடிய மகிழ்வுகள்

Continue reading “மாறாத நினைவுகள்- கவிதை”

காசிம் குறும்படம் விமர்சனம்

காசிம்

நண்பனின் உண்மைத்தன்மை எப்படிப்பட்டது என விளக்குகின்ற, நட்பின் இலக்கணம் கூறும் மிக அற்புதமான படம் காசிம் குறும்படம் ஆகும்.

சினிமா வாய்ப்புத்தேடி சென்னை செல்லும் ஒரு சராசரி இளைஞர் தான் நாகராஜ்.

அவர் தங்குவதற்கும் உணவுக்கும் கஷ்டமில்லாமல் இருக்க‌, ஒரு உணவகத்தில் வேலை பார்த்துக் கொண்டே சினிமா வாய்ப்பைத் தேடுகிறார்.

அந்த உணவகத்தில் பாத்திரங்கள் கழுவுவதற்கும், காய்கறிகள் வெட்டுவதற்கும் கல்கத்தாவிலிருந்து வந்த காசிம், அவரிடம் நட்பாய் பழகுகிறான்.

Continue reading “காசிம் குறும்படம் விமர்சனம்”

8 குறும்படம் விமர்சனம்

8 ‍- குறும்படம் விமர்சனம்

8 குறும்படம், ஆழமான நட்பு ஏமாற்றப்படும் பொழுது, கொல்லவும் செய்யும் விரக்தியை உடையது என்பதை விளக்குகிறது.

கொடூரமாகக் கொலை செய்யத் துடிப்பவளுக்கு ஆதரவாகப் பேசினால், உங்களுக்குப் பிடிக்குமா?.

குழந்தை சிலநேரம் பொம்மை கேட்டு அடம்பிடிக்கும். அதன்மேல் அலாதியான பிரியம் கொண்டு, ஆசை கொண்டு, எப்படியேனும் பொம்மையை வாங்கிவிட, மண்ணில் புரண்டு கூட அழும்.

ஆனால், கிடைக்காது எனத் தெரிந்ததும் விட்டு விடும். பாவம், குழந்தையென கொஞ்ச‌நேரம் கழித்து அந்தப் பொம்மையை வாங்கிக் கொடுத்தால், வேண்டா மெனத் தூரத் தூக்கி எறியும்.

Continue reading “8 குறும்படம் விமர்சனம்”

செல்லச் சிணுங்கல் – கவிதை

செல்லச் சிணுங்கல்

என் பொழுதுகள்
நீயின்றி விடிவதில்லை
என் இரவுகள்
உனை காணாமல் கடப்பதில்லை

உன் துணையின்றி
செல்ல விருப்பமில்லை
சென்றாலும் உன் நினைவுகள்
என்னை விடுவதில்லை

Continue reading “செல்லச் சிணுங்கல் – கவிதை”