கிராமம் ‍- பாகம் 1 – விலைக்கு வாங்க முடியாத மகிழ்ச்சி

கிராமம் - மகிழ்ச்சி

கிராமம் என்பது சிலர் கூடி வாழும் இடம் என்பதல்ல. கிராமம் என்பது விலை கொடுத்து வாங்க முடியாத மகிழ்ச்சியினை வழங்கும் ஓர் உயிர்ச் சூழல்.

இன்றைய வேகமான வளர்ச்சியின் காரணமாக, நமது இளம் தலைமுறையினர் கிராம வாழ்க்கை பற்றி அறியாமல் இருக்கின்றனர். நகரத்தில் இருந்தாலும் கிராம வாழ்க்கையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

இயற்கையோடு இயைந்த கிராம வாழ்க்கை எப்படி இன்பமயமாக இருந்தது என்பதை நமக்கு விளக்கும் விதமாகத் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

Continue reading “கிராமம் ‍- பாகம் 1 – விலைக்கு வாங்க முடியாத மகிழ்ச்சி”

பசியைப் போக்குவோம் – சிறுகதை

பசியைப் போக்குவோம்

மண்வாசனை மயக்க, மழை லேசான தூரலுடன் தொடங்கி, விரைவான துளிகளாய் மண்ணைக் குழப்பியது.

ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷாம், பொழிகின்ற மழையை ரசித்துக் கொண்டே சாப்பிட்டான்.

ஒருஅகலமான தட்டில் சிக்கன் பிரியாணியும், அவித்த முட்டையும், பொறித்த கோழிக்கறி துண்டுகளும் நிரம்பி வழிந்தன. ஷாம் பாதி சாப்பிட்டுவிட்டு மீதியைத் தட்டிலேயே வைத்தான். Continue reading “பசியைப் போக்குவோம் – சிறுகதை”

நிலா சோறு – கிராமத்து சிறுகதை

நிலா சோறு

“நிலா சோறு, அப்படினா என்னம்மா?” என்றாள் மூன்று வயது மகள் வாணி, தன் தாய் ரமாவிடம்.

“என்ன, திடீருன்னு நிலா சோறு பத்தி கேட்க?”

“இல்லம்மா பக்கத்து வீட்டு பரணி, சித்ரா பௌர்ணமிக்கு நிலா சோறு சாப்பிடப் போறதா எங்ககிட்ட சொன்னான். அதான் பாப்பா அதப்பத்தி கேட்கா.” என்றான் ஐந்து வயது ரமணி.

“சித்திரை மாசம் பௌர்ணமி அன்னைக்கு இரவு, எல்லோரும் வீட்ல வட பாயசத்தோட விருந்து சமைச்சு மொட்ட மாடியில, ஆத்தங்கரையில, வீட்டு முத்தத்துலன்னு கூட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவாங்க. அதத்தான் நிலா சோறுன்னு சொல்லுவாங்க.

வர்ற சித்திரா பௌர்ணமிக்கு, நம்ம வீட்ல எல்லாரும் மொட்ட மாடியில நிலா சோறு சாப்பிடுவோம் சரியா?” என்றாள் ரமா.

ரமா கூறியதைக் கேட்டதும் குழந்தைகள் இருவரும் “ஹே ஜாலி, ஜாலி” என்று குதித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்து பின்பு கல்லூரிப் படிப்புக்காக சென்னைக்கு வந்து, பின்னர் அங்கேயே வேலை வாங்கி, கல்யாணத்திற்குப் பின்பும் சென்னையிலேயே செட்டிலாகி விட்டவள் ரமா.

நிலா சோறு என்ற வார்த்தையைக் கேட்டதும், அவளுக்கு ஊரில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது சாப்பிட்ட நிலா சோறு நினைவிற்கு வந்தது. வித்தியசமான நிகழ்வு அது.

சென்னையில் யாருக்கும் அப்படியொரு நிலா சோறு சாப்பிட்ட அனுபவம் இருக்காது என்ற பெருமிதத்தோடு, பழைய நினைவுகளில் மூழ்கினாள் ரமா. Continue reading “நிலா சோறு – கிராமத்து சிறுகதை”

போதை பாதை போகாதே – சிறுகதை

போதை பாதை போகாதே

கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் கார்த்தி, பிரபு, ராஜா மூவரும் ஒற்றையடிப் பாதை செல்லும் அந்த காட்டுப் பகுதியில், மான்கள் துள்ளிக் குதித்து வருவது போல் வந்தனர்.

அவர்களின் கையில் ஒருபை இருந்தது.

ஒருமரத்தின் அடியில் புல் தரையில் அமர்ந்தனர். கார்த்தி பையிலிருந்து அதனை எடுத்தான். Continue reading “போதை பாதை போகாதே – சிறுகதை”

மகிழ்வித்து மகிழ் – சிறுவர் கதை

மகிழ்வித்து மகிழ்

மகிழ்வித்து மகிழ் என்று ஆசிரியர் அன்பழகன் மூன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

“என் அருமைக் குழந்தைகளே, மகிழ்வித்து மகிழ் என்பதை நான் உங்களுக்கு சின்ன கதை மூலம் விளக்குகிறேன் கேளுங்கள். Continue reading “மகிழ்வித்து மகிழ் – சிறுவர் கதை”