மகாராணிக‌ள்

ஒரு ஆங்கிலேயரும் ஒரு இந்தியரும் உரையாடிக் கொள்கிறார்கள்.

இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்.

ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள், கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே?

இந்தியர் : உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா?

ஆங்கிலேயர் : அது முடியாதே!

இந்தியர் : ஏன் முடியாது?

ஆங்கிலேயர் : அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே!

இந்தியர் : உங்கள் நாட்டை பொறுத்தவரை ராஜாவின் மனைவி மட்டும் தான் ராணி, ஆனால் எங்கள் நாட்டை பொறுத்தவரை அனைத்து பெண்களும் எங்களுக்கு மகாராணிகள் தான்.

இந்த பதிலை கேட்டவுடன் அந்த‌ ஆங்கிலேயர் வாயடைத்துப் போனார்.

ஆங்கிலேயரிடம் உரையாடிய இந்தியர் வேறு யாருமல்ல.

“சுவாமி விவேகானந்தர்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது