வந்தது பொங்கல்!

வந்தது பொங்கல்! வந்தது பொங்கல்!

மலர்கள் எங்கும் பூத்ததே!

வந்தது பொங்கல்! வந்தது பொங்கல்!

மாடு கன்று கொழுத்ததே!

 

வந்தது பொங்கல்! வந்தது பொங்கல்!

வாழையும் குழையும் பழுத்ததே!

வந்தது பொங்கல்! வந்தது பொங்கல்!

மாவும் பலாவும் பழுத்ததே!

 

வந்தது பொங்கல்! வந்தது பொங்கல்!

வந்தன கரும்பு கழிகளே!

வந்தது பொங்கல்! வந்தது பொங்கல்!

பாலும் பொங்கி வழிந்ததே!

 

வந்தது பொங்கல்! வந்தது பொங்கல்!

புதிய ஆடை வந்ததே!

வந்தது பொங்கல்! வந்தது பொங்கல்!

புதிய ஆண்டும் வந்ததே!

– வாணிதாசன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது