ஸ்வீட் கார்ன் சூப் செய்வது எப்படி?

ஸ்வீட் கார்ன் சூப்

ஸ்வீட் கார்ன் சூப் மிகவும் சுவையான சூப் ஆகும். இதனை எளிதாகவும் ருசியாகவும் வீட்டிலேயே செய்யலாம். குளிருக்கு ஏற்ற அருமையான சூப் இது. நார்ச்சத்து மிகுந்த இது ஆரோக்கியமானதும் கூட.

இனி சுவையான ஸ்வீட் கார்ன் சூப் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “ஸ்வீட் கார்ன் சூப் செய்வது எப்படி?”

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் என்று தொடங்கும் இப்பாடல் திருவெம்பாவையின் இருபதாவது பாடல் ஆகும்.

திருவெம்பாவை பாடல்கள் உலக உயிர்களுக்கு வீடுபேற்றினை வழங்கும் சிவபெருமான் மீது, அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரான மாணிக்கவாசகரால் பாடப் பெற்றது.

கி.பி.9-ம் நூற்றாண்டில் பாடப்பெற்ற திருவெம்பாவை பாடல்கள் இன்றைக்கும் மார்கழியில் இறைவழிபாட்டின் போது, பாடப்படும் சிறப்பினைக் கொண்டுள்ளன.

Continue reading “போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்”

கலைமகள் – கவிதை

கலைமகள்

வெண்கமலம் மீதினிலே

வீற்றிருக்கும் பூமகளே

பண்ணிசைக்கும் வீணையொடு

பார்புகழும் கலைமகளே

என்மனதின் கோவிலுக்குள்

ஏற்றுகின்றேன் தீபமம்மா

பொன்மின்னும் தாரகையே

போற்றுகின்றேன் உன்னையம்மா Continue reading “கலைமகள் – கவிதை”

சொர்க்க வனம் 16 – வாக்டெய்லின் சுகவீனம் ஏன்?

வாக்டெய்லின் சுகவீனத்திற்கு காரணம்

அடுத்து இரண்டு நாட்கள் கடந்தன. சிலசமயங்களில் வாக்டெய்ல் கண்விழித்துப் பார்த்தது; பின்னர் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தது. எனினும், கனலியின் அறிவுரைப்படி மருந்துகளை சீரான இடைவெளியில் வாக்டெய்லுக்கு கொடுத்து வந்தது ஆடலரசு.

நான்காம் நாள்…. வாக்டெய்லின் உடல்நிலை தேறியது. Continue reading “சொர்க்க வனம் 16 – வாக்டெய்லின் சுகவீனம் ஏன்?”

தமிழ்ச்சுரங்கம்.காம் – மாபெரும் அறிவுச் சுரங்கம்

தமிழ்ச்சுரங்கம்.காம்

தமிழ்ச்சுரங்கம் எனும் பெயருக்கேற்ப மாபெரும் அறிவுச் சுரங்கமாகவும், ஆற்றல் தரும் சுரங்கமாகவும், ஊற்றாய் ஊறும் சிந்தனைகளைத் தரும் சிந்தனைச் சுரங்கமாகவும், சேகரத்தின் முழுமையை உணர்த்தும் முழுமையின் சேகரமாகவும் அமைந்திருப்பதை தமிழ்ச்சுரங்கம்.காம் தளத்தைப் படிப்பவர் அனைவரும் உணரலாம்.

சுரங்கம் என்றால் தமிழெனும் மலையைத் தேடச் செல்லும் பாதுகாப்பான, அழகான சுரங்கம் இதுவாகும்.

வாருங்கள் தளத்தைக் குறித்துக் காண்போம். Continue reading “தமிழ்ச்சுரங்கம்.காம் – மாபெரும் அறிவுச் சுரங்கம்”