அஞ்சனை மைந்தனாய் அபயம் அளித்த மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்
காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.
மூலவர் அனுமந்தராயசாமி கருவறையில் ஸ்ரீராம பிரானின் பக்தராக கரம் குவித்து வணங்கும் பக்த ஆஞ்சநேயராக காட்சி தருகிறார்.
இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமை விழா விமரிசையாக நடைபெறும்.
பங்குனி மாதம் முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜையையொட்டி அனுமந்தராயசாமிக்கு அபிஷேக பூஜை முடிந்து பக்தர்களுக்கு அஞ்சனை மைந்தனாய் அபயம் அளித்தார் மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்.
முன்னதாக புலவர் தாச.அரங்கசாமியின் வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவு,முத்துக்கல்லூர்,சுண்டக்கரைப்புதூர் மற்றும் காரமடை மேற்கு வட்டார பஜனைக் குழுவினரின் பக்தி பஜனை நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, புஜங்னூர், தாயனூர், வெள்ளியங்காடு மற்றும் தோலம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆஞ்சநேயர் பக்தர்கள் குழு சார்பில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
S.V.P. சங்கத்தமிழன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!