அதிசய எண் தெரியுமா?

கணிதத்தில் எந்த ஒரு எண்ணையும் ஒன்றிலிருந்து பத்து வரை உள்ள எல்லா எண்களாலும் வகுக்க முடியாது. ஆனால் ஒரே ஒரு எண் மட்டும் அதற்கு விதி விலக்கு.

அந்த எண் உலக அளவில் இருக்கும் கணிதவியலாளர்களால் புதிராகப் பார்க்கப்பட்டது. அந்த எண் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது என்று கூடச் சொல்லலாம்.

அந்த எண் பாரதத்தின் அற்புதமான திறமை வாய்ந்த கணிதவியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எண் : 2520

மேலோட்டமாகப் பார்த்தால் எத்தனையோ எண்களில் இதுவும் ஒன்று என்று தோன்றும்.

ஆனால் அப்படி அல்ல. உலகக் கணிதவியலாளர்களால் கடந்து போக முடியாத ஆச்சர்யத்தை கொடுத்த ஒரு எண்!

ஏனெனில் 1-10க்குள் உள்ள எந்த ஒரு எண்ணாலும், அதாவது அது ஒற்றைப்படை எண்ணோ (1,3,5,7,9) அல்லது இரட்டைப்படை எண்ணோ (2,4,6,8,10) அதனால் வகுக்கப்படக் கூடிய எண்ணாக அது இருந்தது தான்!

இது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடும்; முடியவே முடியாது என்று கூடத் தோணும்.

கீழேயுள்ள கணித அட்டவணையைப் பாருங்கள்.

2520 ÷ 1 = 2520

2520 ÷ 2 = 1260

2520 ÷ 3 = 840

2520 ÷ 4 = 630

2520 ÷ 5 = 504

2520 ÷ 6 = 420

2520 ÷ 7 = 360

2520 ÷ 8 = 315

2520 ÷ 9 = 280

2520 ÷ 10 = 252

இதன் மர்ம முடிச்சை அவிழ்த்தது கணிதவியலாளர் இப்படித்தான்.

[7 × 30 × 12] என்ற இந்தப் பெருக்கல் தான்!

நமது பாரதம் பின்பற்றிய ஆண்டுக் கணக்குப்படி இந்தப் புதிருக்கு ஒரு விடை கிடைத்து விட்டது.

இந்த எண்ணை ஒன்றிணைத்தவை (coefficient)

வாரத்திற்கு நாட்கள் – 7

மாதத்திற்கு நாட்கள் – 30

ஒரு ஆண்டுக்கு மாதங்கள் – 12

[7 × 30 × 12 = 2520]

இதுவே காலத்தின் சிறப்பியல்பு.

இதைக் கண்டு பிடித்த அந்த அற்புதமான மூளைக்கு உரியவர்

சீனிவாச இராமானுஜன் அவர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.