கால்பந்தாட்டத்தின் கதை – ஜானகி எஸ்.ராஜ்

‘கால் பந்தாட்டம்’ என்பது இரு கோஷ்டிகளாக, ஒவ்வொன்றிலும் பதினோரு விளையாட்டு வீரர்களைக் கொண்டு நீண்ட சதுர மைதானத்தில் ஆடப்படும் ஓர் ஆட்டம்.

மைதானத்தின் இரு மூலைகளிலும் ‘கோல் கம்பம்’ (Goal Post) அமைக்கப்பட்டு காலால் உதைக்கப்படும் பந்தை ஒருவருக்கொருவர் எதிரணியின் கம்பத்திற்குள் நுழைக்க உற்சாகத்துடன், உத்வேகத்துடன் ஆடி, வெற்றி வாகை சூட முயல்வர்.

கால்பந்தாட்ட விளையாட்டு கிரீஸ் நாட்டிலும், ரோமிலும் தான் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிரபலமானது.

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் ஹென்றி இந்த ஆட்டத்திற்கு தடை விதித்தார். நாட்டின் பாதுகாப்பிற்காக வில் அம்புப் பயிற்சி மேற்கொள்ளும் நபர்களின் கவனத்தை கால்பந்தாட்டம் சிதறடிப்பதாக இவர் நினைத்தார்.

பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் மீண்டும் கால்பந்தாட்டம் பிரபலமடைய ஆரம்பித்தது. 1830-களில் மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்தனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் கால்பந்தாட்டம் வேகமாகப் பரவி பிரபலமடைய ஆரம்பித்தது.

1906-ம் ஆண்டு தான் கால்பந்தாட்டத்திற்கான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டன.

கடந்த நூறு ஆண்டுகளில் கால்பந்தாட்டம் மிகவும் புகழ் வாய்ந்த முக்கிய ஓர் விளையாட்டாக உயர்ந்து இன்று எந்த நாட்டிலும் அது ஒரு தேசிய விளையாட்டாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கால்பந்தாட்டம் மிகச்சிறந்த பயிற்சியாளர்களால் வீரர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. பல நாடுகளுக்கிடையே கால்பந்தாட்டப் போட்டிகள் (Matches) நடத்தப்படுகின்றன.

50,000 முதல் 1,00,000 பேர் வரை அமர்ந்து ஆட்டத்தை கண்களிக்க விளையாட்டு அரங்கம் (Stadium) அமைக்கப்படுகிறது.

பிரேசிலில் பீலே (Pele) அர்ஜென்டினாவில் டியெகோ மரடோனா (Diego Maradona) ஹாலந்தில் ஜோஹன் குருயிஃப் (Johan Cruyff) இங்கிலாந்தில் ஸ்டான்லி மாத்யூஸ் (Stanley Mathews), ஜெர்மனியில் ஃப்ரான்ஸ் பெக்கென்பர் (Franz Beckenbauer) ஆகியோர் உலக அளவில் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர்கள்!

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.