அதிரசம் செய்வது எப்படி?

சுவையான அதிரசம்

அதிரசம் தன் பெயருக்கு ஏற்றவாறு அதிக ருசியை வழங்கும் இனிப்பு வகை பலகாரங்களில் ஒன்று.

பண்டிகை நாட்களில் வீடுகளில் அதிரசம், முறுக்கு, சீனி மிட்டாய் உள்ளிட்ட பலகாரங்கள் செய்வது என்பது நம் நாட்டின் பழங்காலப் பழக்க வழக்கங்களில் ஒன்று.

இன்றைக்கு கடைகளில் பலகாரங்கள் சாதாரணமாகக் கிடைக்கின்றன. எனினும் வீட்டில் சுவையான, ஆரோக்கியமான பலகாரங்களைச் செய்து ருசிப்பதின் சுகமே தனிதான்.

அந்த வகையில் அதிரசத்தை வீட்டில் எளிய வழியில் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி                            – 400 கிராம்

ஏலக்காய்                      –  5 எண்ணம்

சுக்கு                                 –  சுண்டு விரல் அளவு

மண்டை வெல்லம் – 300 கிராம்

எண்ணெய்                   – பொரித்தெடுக்க தேவையான அளவு

 

அதிரசம் செய்முறை

அரிசியை 1 – 1½ மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை நன்கு வடித்து விடவும்.

பின் அரிசியை உலர்ந்த துணியில், நிழலில் காய வைக்கவும்.

முக்கால் பாகம் காய்ந்தவுடன் மிசினில் இடித்துக் கொள்ளவும்.

இடித்த மாவை சலித்துக் கொள்ளவும்.

 

இடித்து சலித்த மாவு
இடித்து சலித்த மாவு

 

வெல்லத்தை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

பின் ஏலக்காய், சுக்கு கலவையை இடித்த மாவுடன் சேர்க்கவும்.

 

மாவுடன் பொடித்த ஏலக்காய், சுக்கு கலவையை சேர்த்தவுடன்
மாவுடன் பொடித்த ஏலக்காய், சுக்கு கலவையை சேர்த்தவுடன்

 

துண்டுகளாக்கிய‌ வெல்லத்தை அடிகனமான பாத்திரத்தில் 25 கிராம் (1/8 டம்ளர்) தண்ணீர் விட்டு காய்ச்சவும்.

 

வெல்லத்தை பாகு காய்ச்ச வைத்தவுடன்
வெல்லத்தை பாகு காய்ச்ச வைத்தவுடன்

 

வெல்லம் முழுவதும் கரைந்ததும்,  அடுப்பை சிம்மில் வைத்து மெல்லிய தீயில் கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.

(வெல்லப் பாகை சிறிது எடுத்து விரல்களுக்கு இடையே வைத்து விரல்களை மேலும் கீழும் அசைக்கும் போது கம்பி போல் வரும்).

 

தயார் நிலையில் வெல்லப்பாகு
தயார் நிலையில் வெல்லப்பாகு

 

பின் வெல்லப் பாகை வடிகட்டி சிறிது சிறிதாக  அரிசிமாவில் சேர்த்து கட்டி விழாதவாறு கிளறவும்.

 

வெல்லப்பாகை வடிகட்டி மாவில் சேர்க்கும்போது
வெல்லப்பாகை வடிகட்டி மாவில் சேர்க்கும்போது

 

வெல்லப்பாகையும் மாவையும் கிளறும்போது
வெல்லப்பாகையும் மாவையும் கிளறும்போது

 

அதிரச மாவானது சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும்.

 

தயார் நிலையில் அதிரச மாவு
தயார் நிலையில் அதிரச மாவு

 

அடிகனமான பாத்திரத்தில் எண்ணெயை (பொரித்து எடுப்பதற்கு ஏற்ப) காய வைத்து அதிரச மாவை வடை மாதிரி தட்டி எண்ணெயில் போடவும்.

 

வடை வடிவில் தட்டப்பட்ட அதிரசம்
வடை வடிவில் தட்டப்பட்ட அதிரசம்

 

 அதிரசம் எண்ணையில் போட்டதும்
அதிரசம் எண்ணையில் போட்டதும்

 

ஒருபுறம் வெந்ததும் அதிரசத்தை மறுபுறம் திருப்பி விடவும்.

 

அதிரசத்தை திருப்பிப் போட்டதும்
அதிரசத்தை திருப்பிப் போட்டதும்

 

அதிரசமானது நிறம் மாறியவுடன் எடுத்து விடவும்.

சுவையான அதிரசம் தயார்.

குறிப்பு

அதிரசங்கள் சூடு ஆறியதும் காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

“அதிரசம் செய்வது எப்படி?” அதற்கு 2 மறுமொழிகள்

  1. jothi

    Wow superb. Nalla irukku.

    Nice efforts

  2. Meera

    Hi, 
    In case you wish to prepare sugar adhirasam (white sugar or raw cane sugar /brown sugar) try this way once… no syrup consistency fear!!! simple… take 1 cup of raw rice – procedure same for preparing rice flour. Take half cup of sugar – not powdered, as it is mix with the “little moist” rice flour for 2 – 3 minutes using a spoon or ladle, leave it covered overnight. Next day using your hands mix the dough which would by now resemble like chappathi dough. If need, repeat, only if there is a need and you feel the dough is very stiff, use half or 1 spoon of HOT water and gently knead and then deep fry them as usual!!!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.