தாயின் கருவில் தயாளரா யிருந்தோம்
வாயி லொன்பதும் வாய்க்கப் பெற்றோம்
கோயில் கருவறை இதுவென் றுணர்ந்தோம்
நோயில் படுக்கும் நொடியின் பொழுதிலே…
நித்திலம் காத்த சிப்பியாய் நாளும்
கைத்தலம் தடவியே சிற்பியு மானாள்
நாட்படு தேறலாய் ஊறிய பாலும்
நலம்பெற நமக்கு அமுதா யளித்தாள்…
பெண்ணாய் பிறந்ததால் பெருவலியும் சுமந்தாள்
கண்ணாய் உனையும் காத்தும் நின்றாள்
ஊணுறக்கம் மறந்தே உணர்வொடு வளர்த்தாள்
பேணுதற்கு இவளைப்போல் கண்டில்லை உலகிலே…
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
கைபேசி: 6374836353