அடைமழையில் நனைந்திடலாம்
அருவிதனை இரசித்திடலாம்
அழகிய விடியலை
அதிகாலை கண்டிடலாம்…
ஆகாய கங்கைபில்
ஆத்மார்த்தமாக குளித்திடலாம்
ஆதவனின் கதிர்கள்
ஆன்மாவில் படர்ந்திடலாம்…
தடைகளில்லா ஓட்டங்களில்
தசைகள் தாண்டிடலாம்
தங்கு தடையின்றி
தண்மையை தேடிடலாம்…
மேகக் கூட்டங்களிடையே
மேன்மையாகப் பறந்திடலாம்
மேலாண்மை பராமரிப்போடே
வேளாண்மை செய்திடலாம்…
அருவியில் மேலேறி
அருமையாக குதிக்கலாம்
அன்னப் பறவையாக
அருஞ்சுவை பிரிக்கலாம்…
சாரலின் மென்மையை
சாளரத்திலே உணரலாம்
சாகசங்களை செய்தே
சாதனையாளர்கள் ஆகலாம்…
மெல்லிய பூங்கொடியில்
மென்மையான பூக்களை
மேன்மையாய் உருவாக்கலாம்
மேதினியில் மோகனமாகலாம்…
அந்தி வானம்
அந்தரத்தில் சிவக்கலாம்
அருங்காட்சிகள் பல
அருமையாக ருசிக்கலாம்…
ஆதவனின் உக்கிர
ஆளுகையின் வேளையில்
ஆக்கப்பூர்வமான தண்ணீர்
ஆதர்சமான பந்தல்கள்
ஆலயங்களில் கொணரலாம்
ஆண்டவனாய் உணரலாம்
ஆண்டவர்கள் கண்முன்னே
ஆதர்ச மன்னர்களாகலாம்…
பூமிப்பந்தின் கரையில்
பூரிப்பாய் சுற்றலாம்
பூக்களின் அழகியலின்
பூபாளம் பாடலாம்…
மின்னலின் பின்னலென
மினுமினுத்தே சொலிக்கலாம்
தடையில்லா இயற்கையின்பம்
தரணியிலே பெற்றிடலாம்…
இரஜகை நிலவன்
மும்பை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!