அருவி
தன்னைத் தழுவிக்
கொண்டிருக்கும் மலையை
வானமவள் முத்தமிட்டாள்
என்று நதியானவள்
தற்கொலை செய்து
கொண்டாள்….
ராமனா கண்ணனா?
என்னைப் பெண் பார்க்க
வந்த போது நீ பார்த்த
பார்வை
அன்று உப்பரிகையில் நின்ற
சீதையைப் பார்த்த
ராமனின் பார்வை
என்றே நினைத்தேன்…
கல்யாணத்திற்குப் பிறகுதான்
தெரிந்து கொண்டேன்
நீ ராமனல்ல
கண்ணனென்று…