பிறக்குது பிறக்குது புதுவருசம்…
பொங்கிப் பெருகுது வள விருட்சம்….
சிறகினை விரித்து பறந்திடவும்….
சிகரங்கள் தொடும்வரை உயர்ந்திடவும்….
அகமும் புறமும் மகிழ்ச்சிபெறும்…
அற்புத அருவி உதித்திடவும்….
பகைமை நோயினை விரட்டிடவும்…
பாச வலையினை வீசிடவும்….
கடந்ததில் நல்லதை நினைத்திடவும்…
கடத்திடத் தகுந்ததை மறந்திடவும்….
நடக்கும் வாழ்வினில் நன்மைபல…
நாளும் நாமிங்கு பெற்றிடவும்…
உலகம் முழுவதும் ஒருமையெனும்…
உணர்வே எங்கும் நிலைபெறவும்…
பிறந்தது இன்று புதுவருசம்…
மறையுது அழியுது மனவருத்தம்….
கைபேசி: 9865802942
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!