அம்மாவின் அன்பு நிறைந்த
அடுப்பங்கரை
அள்ளித் தந்த ஆரோக்கியம்
அளவில்லா ஆனந்தம்…..
சும்மா நாலு வெங்காயம்
சிறுதுண்டு பெருங்காயம்
அம்மாவின் கைபட்டு வரும்
வாசம் தெரு மணக்கும்…
தூய வெண்மை சோறும் கூட
அவ ஊட்டிவிட அமிர்தமாகும்…
பாவிமக்கா இது புரியாம
பார்சலில உணவை வாங்கி
பாழாகிப் போறீங்களே…
அடுப்பங்கரை எரியும் வரை
ஆரோக்கியம் பெருகும் மக்கா …
அடுப்பு நெருப்பு அணையும் போது
ஆஸ்பத்திரி வாசல் திறக்கும் மக்கா…
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!