ஆலமரத்தடியில் கண்ணயர்ந்தேன்
அது சொல்லும்
கதை கேட்டு மனம் வியந்தேன்!
நட்பு பெருக, சற்று பகையும் பெருகும்
நட்பின் விதைதான் பகையெனும் மலரைத் தரும்
நட்பு ஒரு போதும் நம்மை வார்த்தெடுக்காது
நம்மைப் பகையே எப்போதும் பலப்படுத்தும்
நல்ல பகை தூய நட்பினும் சிறப்பே
நல்ல பகைவனைப் பெற்றவன் பாக்கியவான்
என ஆலமரம் சொன்னது!
உண்மை தானா?
இதற்கு விடை யார் தருவார்?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942