புதுப்புது ராகங்கள்
போடாத தாளங்கள
மது தரும் போதைக்கு
நிகரான கீதங்கள்
உதவாத வாக்குறுதி
உயர்வான பேச்சு மொழி
மதவாதம் இனவாதம்
மாறாத நிறச்சாயம்
பதவி என்பதற்கே
பலவிதமாய் வேஷங்கள்
அதற்கென போட்டு வரும்
அர்த்தஜாம காலங்கள்
கதறி நாம் அழுத
காலத்தில் வாராத
உதவாக்கரை கொடிகள்
ஊர் சுற்றும் நேரங்கள்
இதுதான் சரி என்று
புரியாத பொழுதுக்குள்
பழுதாய் ஒரு தீமை
பரவி விடக் கூடாது
அதனாலே வாக்கினைச் சரியாய்
அளித்திடனும் தோழனே / தோழியே
இதனை மறந்து விட்டால்
ஏற்று வழி கிடையாதே!
அருமை