கண்டவுடன் காதல்
கல்யாணம் முடிந்த பிறகு காதல்
இதெல்லாம் பித்தர்களின்
உளறல்கள்!
காதல் என்பது உணர்வல்ல
காமத்தின் எழுச்சி மட்டுமே!
என்னவளை மணமுடித்த போதும்
மழலைகள் ஈன்ற பின்னேயும்
மாறாத எனது காதல் அபிப்ராயம்
மாறியது ஒருநாள்!
அகவை கடந்து
ஆற்ற வேண்டிய கடமைகள் முடிந்து
கோடிட்ட முகச்சுருக்கங்கள் பெற்று
தள்ளாடும் நடையுடன்
நடுங்கும் எனது விரல்களை
தன் விரல்களோடு கோர்த்து பலம் தந்த
என்னவளின் ஸ்பரிஸம் படும்போதுதான் உறைக்கிறது!
காதல் என்கிற உணர்வு அன்றே
மனதில் வேரூன்றி
இன்று விருட்சமாகி நிற்கிறது என்று!
மஞ்சுளா ரமேஷ்
ஆரணி
மறுமொழி இடவும்