நெல் குத்த உரல் உலக்கை
குத்திய அரிசியை ஊற வைத்து
அரைக்க ஆட்டுக்கல் குழவி
நனைந்த அரிசியை உலர்ந்த
மாவாக்க திருகை
தானியங்களை புடைத்து
சுத்தம் செய்ய சுளகு
கரைச்சு கஞ்சி குடிக்க கும்பா
கைக்குழந்தை பால் குடிக்க கெண்டி
விரிச்சு படுக்க கோரம்பாய்
காத்துக்காக விசிற பனையோலை விசிறி என
நம்மண்ணில் அந்நிய ஆடம்பரம் இல்லாத காலம் வரை
மாத்திரைக்கு இடமில்லை!
மருந்தோட தேவையில்லை!!
எல்லாமே தொலைஞ்சு போச்சு
நோய் சூழ்ந்த வாழ்கையாச்சு!
இயன்றவரை இயற்கையினை
இயல்பாக நாம் தொடர
இன்ப வாழ்வு மீண்டும் வரும்
இனிதாக வாழ்வு சிறக்கும்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942