அகிலம் யாவும் போற்றும் தமிழ்
ஆனந்த வாழ்வு அளிக்கும் தமிழ்
இறைவன் பாடி மகிழ்ந்த தமிழ்
ஈடில்லா இன்பம் அளிக்கும் தமிழ்
உயிரோடு உயிராக இணைந்த தமிழ்
ஊழினை வென்ற சங்கத் தமிழ்
எங்கும் பரவி ஓங்கும் தமிழ்
ஏற்றமே என்றும் காணும் தமிழ்
ஐம்பெருங்காப்பியம் கண்ட தமிழ்
ஒருமைப்பாட்டை நாட்டும் தமிழ்
ஓங்கார ஒலியின் வடிவம் தமிழ்
ஒளவை போற்றி வளர்த்த தமிழ்
அஃதே எங்கள் செம்மொழித் தமிழ்
– கு.வளர்மதி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!