ஏ மச்சான் எனக்கு மட்டும் இப்படி நடக்குது
நான் என்ன பாவம் செஞ்சு புட்டேன் நெஞ்சம் வதைக்குது
பூ வச்சேன் புழுதி மண்ணில் விழுந்து போச்சுது
சாந்து பொட்டும் கூட சடுதியிலே கரையலாச்சுது
பாய் விரிச்சி படுக்கையிலே நெஞ்சம் பதைக்குது
நீ பக்கம் இல்லை என்றே மனம் படபடக்குது
போன மச்சான் காணலன்னு உள்ளம் வேகுறேன்
கண்ணீர் பொத்துக்கிட்டு ஊத்துதுங்க பொசுங்கிப் போகிறேன்
மருக்கொழுந்தே வாடி என்று கெஞ்சி அழைப்பிங்க
இந்த மஞ்சள் முகம் அழகு என்று கொஞ்சி மகிழ்விங்க
கட்டிக் கரும்பே கண்ணே என்று கட்டி அணைப்பிங்க
என்னை விட்டுப் போனது ஏனோ இன்னும் விளங்க வில்லங்க!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!