வெளிநாட்டில் வாழும் தம்பதி அவர்கள்
அவர்களில் மனைவி மட்டும் நம்ம ஊருக்கு வந்தாச்சு
வேலை காரணமாக கணவன் அங்கேய இருந்தபடி…
அந்த கணவனின் நண்பன் பொது இடத்தில் தொலைபேசியில்
பேசியது நமக்கும் கேட்டது
விஷயம் இதுதான்
மனைவி ஒரு
மாதத்திற்கு தேவையான
உணவினை சமைத்து பதப்படுத்தும் கருவியில்
வைத்து விட்டு வந்துள்ளாராம்…
அந்த உணவே அவருக்கு போதுமானதாக உள்ளதாம்!
காலையில் மலர்ந்த மலர் மாலையில்
வாடிவிடுவது இயற்கை
மாறாக எப்போதும் போல் இருந்தால்
அது செயற்கை
உயிர்ப்புடன் இருப்பவை ஒவ்வொன்றும்
உருக்குலைவதே இயற்கை நியதி
உயிர்தன்மை இல்லாதவை உடலுக்கு
தீங்கு விளைவிக்கும்
நோயை தருவிக்கும்
இப்பொழுதெல்லாம் நம்மூர் பழக்கடைகளில்
எந்த பழமும் அழுகிப் போவதில்லை
உணவங்களில்
எதுவும் ஊசிப் போவதில்லை
எண்ணெயில் தயார் செய்தவை
எதுவும் கமறிப் போவதில்லை
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட
உணவு பொருட்களோ (பெப்சி ..கோலா… கேக்… இனிப்பு.. காரம்)
பல மாதங்களாக பாழாப் போனதில்லை
நம் உடலை கெட்டுப் போகமல்
(நோயில் ஆழ்த்தாமல்) விடுவதுமில்லை
நாம் மட்டும் தப்பிக்க வழியுமில்லை. …
இயன்றவரை இயற்கையை நேசிப்போம்
இயல்பான வாழ்வினை யாசிப்போம்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!