வையகம் காக்கவே அவ்வகம் நாடிட
எவ்வகை ஆகினும் மந்திரம் கேட்டிட
துன்பமே வாரினும் இன்முகம் ஆகிட
தன்னையே தந்திட்ட மாமுனி வாழ்கவே!
பத்தெட்டு நாட்களும் கோட்டியூர் சென்றிட
திக்கெட்டும் கூட்டியே யாவரும் உய்ந்திட
நாரணன் நாமமே மெய்யென ஓம்பிட்ட
நாகணை ரூபனே எம்மனார் வாழ்கவே!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com