இறைவன் எங்கே? இறைத் தூதர்கள் எங்கே?
பிறை கண்டு நாளும் தொழுது வணங்கிய இறைவன் எங்கே?
மறைவாய் பரவும் மரணம் கண்டு மறைந்தது எங்கே?
சிறையினில் பிறந்த சின்ன கண்ணன் எங்கே?
மறையின் முதல்வன் மாயவன் எங்கே?
விரைந்து பரவும் மரணம் கண்டு மறைந்தது எங்கே?
சிலுவையை தோளில் சுமந்தவன் எங்கே?
பழியும் பாவமும் போக்கி காக்கும் மேய்ப்பவன் எங்கே?
மின்னலைப் போல பரவும் மரணம் கண்டு மறைந்தது எங்கே?
இறைவன் பெயரால் இனி வருமா பேதம்?
துணிந்தே துயரம் துரத்திடும் நிலையில்
தொலைந்து விடாத மனிதநேயம் வேண்டும்!
விரட்டிடும் மரணம் எதிர்த்திட இங்கே மனிதம் வேண்டும்!
உரமாய் மனிதம் நிலைத்திட வேண்டும்!
உலகம் முழவதும் பரவிட வேண்டும்!
நிலையென மனிதம் நிலைபெற வேண்டும்!
நிரந்தர அமைதியில் உலகம் உறங்கிட வேண்டும்!
நேசம் அன்பு கருணை பாசம்
மனிதம் மனிதம் மனிதம் அதுவே
புனிதம் என்று ஆகிட வேண்டும்!
கைபேசி: 9865802942